வீட்டில் பணம் அதிகமாக சேர வாஸ்து பரிகாரம்!!
வாழ்க்கையில் பணம் ஒன்று தான் மிகவும் அத்தியாவசியமான தேவை பணம் இல்லாமல் ஒரு நாள் கூட யாராலும் வாழ முடியாது. ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுப்பதே அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்துதான். அப்படியான காலகட்டத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால் பணம் அதிகமாக நாம் ச
வாழ்க்கையில் பணம் ஒன்று தான் மிகவும் அத்தியாவசியமான தேவை பணம் இல்லாமல் ஒரு நாள் கூட யாராலும் வாழ முடியாது. ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுப்பதே அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்துதான். அப்படியான காலகட்டத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால் பணம் அதிகமாக நாம் சேர்க்க வேண்டும். அந்த அளவிற்கு பணத்தின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட பணம் நம்மிடத்தில் தங்குவதற்கு நாம் செய்யும் ஒரு சில செயல்கள் முக்கிய பங்காகவும் கருதப்படுகிறது. பணம் நம்மை வந்து அடையாமல் போவதற்கு சில வாஸ்து சாஸ்திரங்களும் உள்ளது அப்படி வாஸ்து சாஸ்திரங்களை சரி செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பணம் சேர பார்க்க வேண்டிய வாஸ்து
படுக்கையறை வாஸ்து
பணம் சேர நான் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று படுக்கையறை வாஸ்து தான். நிம்மதியாக உறங்கக்கூடிய இடமாக இருக்கக்கூடிய படுக்கை அறை எப்பொழுதும் வெளிச்சம் நிறைந்ததாகவும் காற்று ஒளி அனைத்தும் உள்ளே வரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் படுக்கை அறையில் ஜன்னல்களை ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரம் திறந்து வெளிச்சத்தை உள்ளே வர விட வேண்டும்.
கடிகார வாஸ்து
வீட்டில் மாட்டி இருக்கும் கடிகாரம் எந்த சூழ்நிலையிலும் ஓடாமல் நின்று விடக்கூடாது. அப்படி நின்று விட்டால் அதனை உடனே சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் அந்த இடத்தில் இருந்து அகற்றி விட வேண்டும். கடிகாரமானது பின்னோக்கி ஓடினாலும் நிச்சயமாக பணவற்றாக்குறை வீட்டில் ஏற்படும். எனவே ஓடாத கடிகாரம் தவறான நேரம் காட்டும் கடிகாரம் அனைத்தையும் சரி செய்து விடுங்கள் இல்லையென்றால் தூக்கிப்போட்டு விடுங்கள்.
நீரூற்றுத் தொடர்பான வாஸ்து
வீட்டின் தென்கிழக்கு பகுதிகள் நீரூற்று தொடர்பானவற்றை வைக்க வேண்டும். இப்பொழுது நிறைய அலங்கார பொருட்கள் கிடைக்கின்றது அதில் ஏதாவது ஒரு நீர் சார்ந்த அலங்கார பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தால் பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
பழைய பொருட்கள் வாஸ்து
வீட்டில் தேவையில்லாத பழைய பொருட்களை தேக்கி வைக்கக் கூடாது. பழைய இரும்பு பொருட்கள் சனிபகவானின் வாசத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது எனவே வீட்டில் வீட்டின் மொட்டை மாடியில் வீட்டின் வெளியே ஏதேனும் தேவையற்ற இரும்பு சம்மந்த பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தி விட வேண்டும். மேலும் மொட்டை மாடியில் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கண்ணாடி வாஸ்து
வீட்டில் டைனிங் டேபிள் ஏரியாவில் அந்த திசைக்கு எதிரில் ஒரு கண்ணாடியை மாட்டி வைக்க வேண்டும். டைனிங் டேபிள் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்குமாறு இருக்க வேண்டும் அப்படி இருந்தால் வீட்டில் வறுமை ஏற்படாது. அதேபோல் சமையல் அறையில் பழங்கள் காய்கறிகள் போன்றவை பதித்த டைல்ஸ் வாங்கி ஒட்டுவதும் வீட்டில் பணத்தட்டுப்பாட்டை வரவிடாமல் தடுக்கும்.
கழிவு நீர் வாஸ்து
வீட்டிலிருந்தே வெளியேறக்கூடிய கழிவு நீர் வடக்கு திசை நோக்கி செல்லுமாறு இருக்க வேண்டும் அந்த மாதிரி தான் நாம் வீட்டை அமைக்க வேண்டும். இந்த அமைப்பில் நாம் வீடு கட்டினால் வீட்டில் பண வரவு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இந்த வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி அனைத்தையும் செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுடைய பொருளாதாரத்தில் நல்ல நிலைமை இருக்கும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் கடிகாரம் வைப்பதற்கான வாஸ்து டிப்ஸ்