Advertisement
சைவம்

சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான வாழைப்பூ கார குழம்பு இப்படி வச்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

வாழை மரத்தில் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் உதவும். வாழைப் போல வடை வாழை இலை சாப்பாடு வறுவல் வாழைத்தண்டு பொரியல் சூப்பரான வாழைப்பழம் அப்படின்னு வாழைமரம் எக்கச்சக்கமான உணவுகளை நமக்கு கொடுக்கும். வாழை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய எல்லாத்திலேயும் நம்ம எது செஞ்சாலும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

ஆனா எல்லாத்துலயும் எப்ப பாத்தாலும் ஒரே மாதிரி செஞ்சு போர் அடிக்குதா அப்போ ஒரு தடவை டிஃபரண்டா வாழைப்பூ வச்சு காரக்குழம்பு செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். கத்தரிக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் கார குழம்பு, முருங்கைக்காய் கார குழம்பு என விதவிதமான காய்கறிகளில் நாம் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் வாய்ப்புகள் ஒருபோதும் வைத்து சாப்பிட்டு இருக்க மாட்டோம்.

Advertisement

ஒருமுறை மட்டும் இந்த வாழைப்பூவில் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். பிறகு அடிக்கடி நீங்கள் உங்கள் வீட்டில் இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவீர்கள். இப்ப வாங்க இந்த சுவையான வாழைப்பூ கார குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வாழைப்பூ கார குழம்பு | Vazhaipoo Kaara Kulambu In Tamil

Print Recipe
வாழைமரத்தில் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் உதவும். வாழைப் போல வடை வாழை இலை சாப்பாடு வறுவல் வாழைத்தண்டு பொரியல் சூப்பரான வாழைப்பழம் அப்படின்னு வாழைமரம் எக்கச்சக்கமான உணவுகளை நமக்கு கொடுக்கும். வாழை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய எல்லாத்திலேயும் நம்ம எது செஞ்சாலும்
Advertisement
டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒருமுறை மட்டும் இந்த வாழைப்பூவில் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். பிறகு அடிக்கடி நீங்கள் உங்கள் வீட்டில் இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவீர்கள்
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Vazhaipoo Kaara Kulambu
Prep Time 5 minutes
Cook Time 7 minutes
Servings 4
Calories 245
Advertisement

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 வாழைப்பூ
  • 15 சின்ன வெங்காயம்
  • 7 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 தக்காளி
  • சிறிய எலுமிச்சை பழ அளவு புளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் வாழை பூவை நன்றாக சுத்தம் செய்த பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  •  
    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், சீரகம், பத்து சின்ன வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக வதக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து மீதி இருக்கும் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி முடிந்தவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தக்காளி வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு புளியை நன்கு கரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். குழம்பு 10 நிமிடங்கள் வெந்தவுடன் வாழைப்பூவை சேர்த்து கிளறவும். வாழைப்பூவை சேர்த்து வாழைப்பூ நன்றாக வேகும் வரை வேக வைக்கவும்.
  • இறுதியாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான வாழைப்பூ காரக்குழம்பு தயார்.
     

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg
Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

3 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

14 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

16 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

24 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago