சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான வாழைப்பூ மிளகு மசாலா பெரியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
நாம் அனைவருமே இந்த உலகில் நன்கு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு மிகவும் உதவுவது உணவுகள் தான். அப்படி நமது ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க உதவும் உணவுகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள மறுப்பார்கள். அதிலும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவு என்றால் அதிக அளவு சாப்பிடுவார
நாம் அனைவருமே இந்த உலகில் நன்கு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு மிகவும் உதவுவது உணவுகள் தான். அப்படி நமது ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க உதவும் உணவுகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள மறுப்பார்கள். அதிலும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவு என்றால் அதிக அளவு சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கிவிடுவார்கள். அப்படி அவர்களால் ஒதுக்கப்படும் பல உணவுகளில் ஒன்று தான் இந்த வாழைப்பூ. ஆனால் வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது!
அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. பொதுவாக நாம் அடிக்கடி கேரட், பட்டாணி, கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய் போன்றவற்றை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.
வாழைப்பூவில் பொரியல் செய்து கொடுத்தாலோ குழம்பு செய்து கொடுத்தாலோ கட்டாயமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்வார்கள். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவில் மிளகு மசாலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த வாழைப்பூ மிளகு மசாலா மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சற்று சுலபமாகவும் இருக்கும்.