Advertisement
காலை உணவு

இரவு உணவுக்கு இப்படி வெஜ் ரோல் ட்ரை பண்ணி பாருங்கள்! குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல மேலை நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினரால் பிரபலம் அடைந்தது.

இப்பொழுது உலகம் முழுவதும் சப்பாத்தி என உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருக்கின்றது. சப்பாத்திகளை வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக சப்பாத்தி வெஜ் ரோல் ஆக செய்து கொடுக்கலாம். இவை அலுவலகங்களுக்கோ அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்து கொடுத்து அனுப்புவதற்கு உகந்தது. பொதுவாகவே சப்பாத்திகள் உடம்பிற்கு மிகவும் நல்லது.கடைகளில் விற்கப்படும் வெஜ் ரோல் செய்வது பெரிய கம்பு சுத்துற வேலை எல்லாம் ஒன்றும் இல்லைங்க! வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் இதை செய்யலாம். ஆனால் இதை செய்வதற்கு சில காய்கறிகள் நமக்கு தேவைப்படும்.

Advertisement

இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒருமுறை நீங்கள் செய்து பாருங்கள் இனி பிரைட் ரைஸ், பீட்சா, இதன்‌ வரிசையில் வெஜ் ரோல் செய்வதும் சுலபமாக மாறிவிடும். சப்பாத்தி வெஜ் ரோலில் காய்கறிகளையும் சேர்த்து செய்வதினால் இவை மேலும் சத்தானதாகின்றன. வெஜ் ரோலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் வெஜ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெஜ் ரோல் | Veg Roll Recipe In Tamil

Print Recipe
சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல மேலை நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினரால் பிரபலம் அடைந்தது. இப்பொழுது உலகம் முழுவதும் சப்பாத்தி என உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருக்கின்றது. சப்பாத்திகளை
Advertisement
வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக சப்பாத்தி வெஜ் ரோல் ஆக செய்து கொடுக்கலாம். இவை அலுவலகங்களுக்கோ அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்து கொடுத்து அனுப்புவதற்கு உகந்தது.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword veg roll
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 69

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 வாணலி

Ingredients

  • 2 கேரட்
  • 1/4 கப் முட்டைக்கோஸ்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1/4 கப் பீன்ஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 கப் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் மைதா மாவை வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், பச்சைப் பட்டாணி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் கொத்தமல்லியை, தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
  • அதன்பிறகு மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி தேய்ப்பது போல வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
  • பின் நாம்‌ செய்து வைத்துள்ள காய்கறி கலவையை பூரியின் நடுவில் வைத்து ரோல் செய்து அதன் ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இவற்றை பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான வெஜ் ரோல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 69kcal | Carbohydrates: 5g | Protein: 7.5g | Fat: 2.3g | Sodium: 2.24mg | Potassium: 187mg | Fiber: 3.1g | Vitamin A: 306IU | Vitamin C: 150mg | Calcium: 17.05mg | Iron: 3.58mg

இதனையும் படியுங்கள் : இனி சப்பாத்தி ரோல் இப்படி செய்து பாருங்க ஒரு ரோல் கூட மீதம் வைக்கமல் சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு c மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

55 நிமிடங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

1 மணி நேரம் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

1 மணி நேரம் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

3 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

4 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

4 மணி நேரங்கள் ago