இனி சப்பாத்தி ரோல் இப்படி செய்து பாருங்க ஒரு ரோல் கூட மீதம் வைக்கமல் சாப்பிடுவாங்க!

mushroom roll
- Advertisement -

குழந்தைகளுக்கு எப்பொழுதும் டின்னருக்கு தோசை, இட்லி என்று எப்பொழுதும் பொல் செய்து தராமல் ஒரு முறை மஸ்ரூம் ரோல் செய்து கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. ரெஸ்டாரண்ட்களில் தரப்படும் பண்ணீர் ரோல். சிக்கன் ரோல், காளான் ரோல் போன்று அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த மஸ்ரூம் ரோல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

-விளம்பரம்-
mushroom roll
Print
No ratings yet

காளான் சப்பாத்தி ரோல் | Mushroom Roll Recipe In Tamil

குழந்தைகளுக்கு எப்பொழுதும் டின்னருக்கு தோசை, இட்லி என்று எப்பொழுதும் பொல் செய்து தராமல் ஒரு முறை மஸ்ரூம் ரோல் செய்து கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. ரெஸ்டாரண்ட்களில் தரப்படும் பண்ணீர் ரோல். சிக்கன் ரோல், காளான் ரோல் போன்று அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த மஸ்ரூம் ரோல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: mushroom roll, மஸ்ரூம் ரோல்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 காளான் தேவையான அளவு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் மஞ்சல் தூள்
  • ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • மிளகு தூள் சிறிதளவு

செய்முறை

  • முதலில் காளானை பொடியாக நறுக்கி தண்ணீரில் கழுவி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம், மற்றும் தக்காளி சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பாதி வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கறிமசாலா தூள், சேர்த்து கலந்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
  • பிறகு நறுக்கிய காளானை சேர்த்து கலந்து மீண்டும் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
  • காளான் வெந்ததும் அதன் மேல் மிளகு தூள் தூவி கிளறிவிடவும்.
  • அடுத்து சப்பாத்திகளை சுட்டு அதன் நடுவில் காளான் கிரேவி வைத்து ரோல் பண்ணி சாப்பிடவும்.
- Advertisement -