சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல மேலை நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினரால் பிரபலம் அடைந்தது.
இப்பொழுது உலகம் முழுவதும் சப்பாத்தி என உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருக்கின்றது. சப்பாத்திகளை வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக சப்பாத்தி வெஜ் ரோல் ஆக செய்து கொடுக்கலாம். இவை அலுவலகங்களுக்கோ அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்து கொடுத்து அனுப்புவதற்கு உகந்தது. பொதுவாகவே சப்பாத்திகள் உடம்பிற்கு மிகவும் நல்லது.கடைகளில் விற்கப்படும் வெஜ் ரோல் செய்வது பெரிய கம்பு சுத்துற வேலை எல்லாம் ஒன்றும் இல்லைங்க! வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் இதை செய்யலாம். ஆனால் இதை செய்வதற்கு சில காய்கறிகள் நமக்கு தேவைப்படும்.
இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒருமுறை நீங்கள் செய்து பாருங்கள் இனி பிரைட் ரைஸ், பீட்சா, இதன் வரிசையில் வெஜ் ரோல் செய்வதும் சுலபமாக மாறிவிடும். சப்பாத்தி வெஜ் ரோலில் காய்கறிகளையும் சேர்த்து செய்வதினால் இவை மேலும் சத்தானதாகின்றன. வெஜ் ரோலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் வெஜ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெஜ் ரோல் | Veg Roll Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 2 கேரட்
- 1/4 கப் முட்டைக்கோஸ்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 1/4 கப் பீன்ஸ்
- 2 பெரிய வெங்காயம்
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 2 கப் மைதா மாவு
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் மைதா மாவை வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், பச்சைப் பட்டாணி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காய்கறிகள் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் கொத்தமல்லியை, தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
- அதன்பிறகு மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி தேய்ப்பது போல வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- பின் நாம் செய்து வைத்துள்ள காய்கறி கலவையை பூரியின் நடுவில் வைத்து ரோல் செய்து அதன் ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
- பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இவற்றை பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான வெஜ் ரோல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இனி சப்பாத்தி ரோல் இப்படி செய்து பாருங்க ஒரு ரோல் கூட மீதம் வைக்கமல் சாப்பிடுவாங்க!