- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Breakfast
காலை சிற்றுண்டி ஒருவருக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் பலரும் தங்களுக்கு இருக்கும் நேரமின்மையால் அதை உண்ணாமலே வெளியில் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில் தயாரித்து சாப்பிடும் சிற்றுண்டி கிச்சடி ஆகும். தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான உணவுகளாக உள்ளன. இருப்பினும், எப்போதும் இட்லி, தோசை என சாப்பிட்டு சில நேரங்களில் நமக்கே போர் அடிக்கும். இதற்கு தீர்வு தரும் சிறந்த காலை உணவு தேர்வாக கிச்சடி உள்ளது.
கிச்சடி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவாகும். கிச்சடிக்கு தேவையான விஷயங்களை தயாராக வைத்தால் போதும், டக்குனு 10 நிமிஷத்தில் காலை உணவை செய்திடலாம். கிச்சடியை டிபன் சாம்பார் அல்லது தேங்காய் சட்னி உடன் பரிமாறினால் அற்புதமாக இருக்கும். காலை உணவிற்கு உப்புமா என்று சொல்லி இனிய காலை பொழுதை போரிங் ஆக மாற்ற வேண்டாம்.
உணவுக்கு சுவையை விட மிக முக்கியம் பெயர் வைப்பது. இதே உப்புமாவில் கொஞ்சம் நெய் மற்றும் காய்கறிகள் சேர்த்தால் அது தான் கிச்சடி! காலை உணவுக்கு கிச்சடி என்று சொல்லி பாருங்கள், நீங்கள் கூப்பிடுவதற்கு முன்னரே அனைவரும் டைனிங் டேபிளில் ஆஜராகி விடுவார்கள். காலை நேரத்தில் என்ன சமைப்பது என்பது பெரும் குழப்பமாக இருந்தால் மணம், சுவை, ஆரோக்கியம் நிறைந்த இந்த கிச்சடியை ட்ரை பண்ணலாம். இந்த கிச்சடி உங்கள் உணவு மெனுவில் நிச்சயம் நீங்கா இடம் பெற்று விடும்.
இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு இப்படி மசாலா ரவை இட்லி செய்து கொடுத்தால் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், தக்காளி ஆகியவற்றை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய், இஞ்சி, தக்காளி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சேமியா, ரவை சேர்த்து வறுத்து அதனுடன் நெய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் சூடான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து, மல்லி இலை, முந்திரி, நெய் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மசாலா கிச்சிடி தயார். இதை தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.






