இரவு உணவுக்கு இப்படி மசாலா ரவை இட்லி செய்து கொடுத்தால் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல் இல்லாத பாட்டி வரை அனைவருக்கும் சாப்பிடக் கொடுக்கக் கூடிய ஒன்று தான் இந்த இட்லி. உடம்பு சரி இல்லாதவர்கள் கூட சாப்பிடுவதற்கு அத்தியாவசியமான ஒரு உணவு என்றால் அது இட்லி மட்டும் தான். ஆனால் இந்த இட்லியை அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தோசையைதான் விருப்பமாக சாப்பிடுகிறார்கள்.

-விளம்பரம்-

இட்லி என்றால் போர் அடிக்கிறது என்று சொல்லும் குழந்தைகளுக்கு இட்லியை அவர்கள் விரும்பும் வகையில் விதவிதமாக செய்து கொடுத்தால் போதும், மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் புது விதமான மசாலா ரவை இட்லி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

காலை உணவில் பெரும்பாலும் இட்லி தோசை தான் இருக்கும் மற்றப்படி இந்த உப்புமா, பொங்கல் போன்ற உணவுகள் சில நேரங்களில் மாற்றி செய்வோம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக செய்து கொண்டிருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மசாலா ரவை இட்லி செய்து சாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். இவையெல்லாம் சுலபமாக இருந்தாலும் இந்த மசாலா ரவை இட்லி செய்யும் முறை சரியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சொதப்பிவிடும். இந்த மசாலா ரவை இட்லி எப்படி பக்குவமாக செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

Print
5 from 1 vote

மசாலா ரவை இட்லி | Masala Rava Idly Recipe In Tamil

காலை உணவில் பெரும்பாலும் இட்லி தோசை தான் இருக்கும் மற்றப்படி இந்த உப்புமா, பொங்கல் போன்ற உணவுகள்சில நேரங்களில் மாற்றி செய்வோம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக செய்து கொண்டிருக்காமல்கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மசாலா ரவை இட்லி செய்துசாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். இவையெல்லாம் சுலபமாக இருந்தாலும் இந்த மசாலா ரவைஇட்லி செய்யும் முறை சரியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சொதப்பிவிடும். இந்த மசாலாரவை இட்லி எப்படி பக்குவமாக செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவுதெரிந்து கொள்ளலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Masala Rava Idly
Yield: 4
Calories: 272kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் புளிக்காத தயிர்
  • 1 கப் நீர்
  • உப்பு தேவையானஅளவு
  • சமையல் சோடா தேவையானஅளவு
  • முந்திரி பருப்பு
  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1 டேபிள்ஸ்புன் கடுகு
  • 1 டேபிள்ஸ்புன் உளுத்தம் பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 2 வத்தல் மிளகாய்
  • 10 இலைகள் கறிவேப்பிலை
  • 1 டேபிள்ஸ்புன் மஞ்சள் தூள்

செய்முறை

  • மசாலா ரவை இட்லி செய்வதற்கு முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.புளிக்காத தயிரை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.
  • தயிருடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு. உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்
  • அதனுடன் ரவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.இட்லி செய்வதற்கு சற்று முன்பாக சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்
     
  • இட்லி தட்டுகளை எடுத்து அவற்றின் நடுவில் முந்திரி பருப்பை வைத்து, அதன் மீது மாவை ஊற்றி வேக வைக்கவும்.மிருதுவான மசாலா ரவை இட்லி ரெடி

Nutrition

Serving: 300g | Calories: 272kcal | Carbohydrates: 45g | Protein: 21g | Fat: 6g | Saturated Fat: 0.8g | Sodium: 390mg | Fiber: 1.2g | Calcium: 28mg | Iron: 2.7mg