ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள் இந்த குதிரைவாலி தக்காளி தோசை செய்து சாப்பிடலாம். அரிசி சேர்க்காமல் சிறுதானியம் சேர்த்து சூப்பரான ருசியான குதிரைவாலி தக்காளி தோசை சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குதிரைவாலி தக்காளி தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, அவியல், சாம்பார் எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை பார்க்கலாம்.

-விளம்பரம்-

குதிரைவாலி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவானது கட்டுக்குள் இருக்கும். குதிரைவாலி அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இது உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது, சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு குதிரைவாலி சிறந்த உணவாக அமைகிறது

- Advertisement -

நாம் வீட்டில் அனைவரும் தோசை அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் குதிரைவாலி வைத்து செய்யப்படும் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? சாதாரண தோசையை  விட இதன் சுவை நன்றாகவும் இருக்கும். இது தயாரிக்க சிறுது நேரம் தான் எடுக்கும். ஆனால், சுவையுடன் சேர்ந்து ஆரோக்கியமும் கிடைக்கும். குதிரைவாலி தக்காளிதோசையை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம் அல்லது இரவு உணவிற்கும் செய்யலாம்.வாங்க இதை எப்படி சுவையாக செய்வது என்ற செய்முறையை பார்க்கலாம்.

Print
No ratings yet

குதிரைவாலி தக்காளி தோசை | Barnyard Tomato Dosa Recipe In Tamil

நாம் வீட்டில் அனைவரும் தோசை அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் குதிரைவாலி வைத்து செய்யப்படும் தோசைசாப்பிட்டிருக்கிறீர்களா? சாதாரண தோசையை  விடஇதன் சுவை நன்றாகவும் இருக்கும். அரிசி சேர்க்காமல் சிறுதானியம் சேர்த்து சூப்பரான ருசியானகுதிரைவாலி தக்காளி தோசை சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம்தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இது தயாரிக்க சிறுது நேரம் தான் எடுக்கும். ஆனால்,சுவையுடன் சேர்ந்து ஆரோக்கியமும் கிடைக்கும். குதிரைவாலி தக்காளி தோசையை உங்கள் குடும்பஉறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம் அல்லது இரவு உணவிற்கும் செய்யலாம்.வாங்க இதைஎப்படி சுவையாக செய்வது என்ற செய்முறையை பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Barnyard Tomato Dosa
Yield: 4
Calories: 212kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • எண்ணெய் தேவைக்குஏற்ப
  • 2 தக்காளி
  • சிறியதுண்டு, இஞ்சி
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவைக்குஏற்ப
  • 4 கப் குதிரைவாலி அரிசி
  • 1 கப் உளுந்து

செய்முறை

  • முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.
  • மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
  • அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
  • சூடானதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • சத்து நிறைந்த குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 212kcal | Carbohydrates: 65g | Protein: 7g | Fiber: 9g | Calcium: 20mg | Iron: 5mg