Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற ருசியான காய்கறி இளங்கூட்டு இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Advertisement

ரொம்ப ரொம்ப ஈசியா காய்கறி இளங்கூட்டு  ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. காய்கள்கறி என்றாலே அவற்றை பொரியல் செய்தால் பலரும் விருப்பமாக சாப்பிடுவதில்லை. எனவே அவற்றை பொடியாக அறிந்து அந்த காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்து கூட்டு செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க  இளங்கூட்டு ரெசிபியை பார்க்கலாம்.

காய்கறி இளங்கூட்டு | Vegetable Kootu Recipe In Tamil

Advertisement
Print Recipe
ரொம்ப ரொம்ப ஈசியா காய்கறி இளங்கூட்டு  ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. காய்கள்கறி என்றாலே அவற்றை பொரியல் செய்தால் பலரும் விருப்பமாக சாப்பிடுவதில்லை. எனவே அவற்றை பொடியாக அறிந்து அந்த காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்து கூட்டு செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க  இளங்கூட்டு ரெசிபியை பார்க்கலாம்.
Course Kootu, LUNCH
Cuisine tamilnadu
Keyword Vegtable
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 52

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் அவரை, கத்திரி, பூசணி, பரங்கி, காராமணி, கொத்தவரை (பொடியாக நறுக்கியது) எல்லாம் கலந்து
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் பால்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து (பாத்திரத்தில்) மலர வேக வையுங்கள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறுங்கள்.
    Advertisement
  • நறுக்கியகாய்கறிக் கலவையுடன் சிறிது உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள்.
  • 2 நிமிடம் கழித்து விசிலை எடுத்து பிரஷரை வெளியேற்றிவிட்டு மூடியைத் திறந்து, வெந்த காய்களுடன் பருப்பை சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடுங்கள் 5 நிமிடம் கொதித்ததும், சீரகம், கிள்ளிய கறிவேப்பிலை. பால் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
  • விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, சத்தான இளங்கூட்டு இது.

Nutrition

Serving: 200g | Calories: 52kcal | Carbohydrates: 6.8g | Protein: 1.7g | Fat: 2g | Sodium: 5.2mg | Potassium: 93.5mg | Fiber: 1g | Vitamin A: 29IU | Vitamin C: 0.7mg | Calcium: 8.1mg | Iron: 0.3mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

45 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago