மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதாவது செய்ய விரும்பினால் இந்த வெஜிடபிள் வடை செய்து பாருங்கள்!!
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடை தான். ஒவ்வொரு முறை டீக்கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நமக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டமாகும். வடை எவ்வளவுதான் சுவயானதாக இருந்தாலும் அது ஆரோக்
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடை தான். ஒவ்வொரு முறை டீக்கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நமக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டமாகும். வடை எவ்வளவுதான் சுவயானதாக இருந்தாலும் அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது மறுக்க முடியாத உண்மை. பெரும்பாலான வீடுகளில் உளுந்து வடை அல்லது பருப்பு வடை செய்வார்கள். இது ஆரோக்கியமான வடையாக இருந்தாலும் அதை கூடுதல் ஆரோக்கியமானதாக மாற்ற அதில் வேறு சில பொருட்களை சேர்க்கலாம்.
அந்த வகையில் சில காய்கறிகள் வைத்து வெஜிடபிள் வடை எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த வெஜிடபிள் வடையை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மழை நேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் இந்த வெஜிடபிள் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்த வடையை செய்வது மிகவும் சுலபமான விஷயம் தான் சமையலறைக்குச் சென்றது ஒரு பத்து நிமிடத்தில் இதைச் செய்து முடித்துவிடலாம். இப்போது சுவையான இந்த வெஜிடபிள் வடை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அவல் வடை செய்வது எப்படி