Advertisement
சைவம்

புதுவிதமான இந்த காய்கறி அடை தோசை செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக நாம் காலையில் அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதையே தொடர்ந்து சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏன் உங்களுக்கும் கூட சலித்து போய் இருக்கும். ஆனால் இன்று தோசை சுடுவது போல் காய்கறி அடை செய்து பார்க்க போகிறோம். இதில் நாம் பெரும்பாலும் காய்கறிகளை அதிகமாக சேர்த்து செய்வதால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை இது அல்லிக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான காய்கறி தோசை செய்வது எப்படி ?

Advertisement

மேலும் குழந்தைகளை விரும்பி உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவையும் அற்புதமாக இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இது பிடித்து போகும் அந்த அளவிற்கு இதில் ஊட்டச்சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படும். ஆகையால் இன்று இந்த காய்கறி அடை தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

காய்கறி அடை தோசை | Vegtable Adai Dosai Recipe in Tamil

Print Recipe
இன்று தோசை சுடுவது போல் காய்கறி அடை செய்து பார்க்க போகிறோம். இதில் நாம் பெரும்பாலும் காய்கறிகளை அதிகமாக சேர்த்து செய்வதால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை இது அல்லிக் கொடுக்கும் மேலும் குழந்தைகளை விரும்பி உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவையும் அற்புதமாக இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இது பிடித்து போகும் அந்த அளவிற்கு இதில் ஊட்டச்சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Vegtable, காய்கறி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 278

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1 கப் ரவா
  • 3 tbsp அரிசி மாவு
  • ¼ கப் துருவிய கேரட்
  • ¼ கப் துருவிய பீட்ரூட்
  • 2 tbsp துருவிய தேங்காய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பேஸ்ட்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 டம்பளர் தண்ணீர்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயை மிதமாக எரிய விட்டு அதில் ஒரு கப் ரவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் வறுத்த ரவையை ஒரு பெரிய பவுளில் தட்டி அதனுடன் அரை கப் அளவு தயிர், 3 டீஸ்பூன் அளவு அரிசி மாவு மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • பின்பு இவ்வாறு தயார் செய்த மாவை ஒரு பத்து நிமிடங்கள் நன்கு
    Advertisement
    ஊற வைத்து. பின் இதனுடன் கால் கப் துருவிய கேரட், கால் கப் துருவிய பீட்ரூட், இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • பின்பு இதனுடன் இன்னொரு அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். மாவு தண்ணீராக இருக்கக் கூடாது கட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
  • பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து தோசை போன்று ரவுண்டாக வைத்து அமுக்கி விட்டு ஒரு மூடியை வைத்து மூடி விடுங்கள்.
  • பின்பு காய்கறி அடை தோசை நன்றாக வெந்ததும் வெளியே எடுத்து விடுங்கள். பின் இதனுடன் சட்னி வைத்து சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும் அவ்வளவுதான் சுவையான காய்கறி அடை தோசை தயார்.

Nutrition

Serving: 250gram | Calories: 278kcal | Carbohydrates: 47g | Protein: 37.3g | Fat: 12.3g | Saturated Fat: 4.3g | Sodium: 42mg | Potassium: 378mg | Fiber: 14.5g | Iron: 88mg

English Overview: vegtable adai dosai is one of the most important dish in south india. vegtable adai dosai or vegtabe adai dosai seivathu eppadi or vegtable adai dosai in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

2 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

2 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

4 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

7 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

7 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

7 மணி நேரங்கள் ago