ருசியான வெண்டைக்காய் சட்னி இப்படி செய்து ஒரு முறை செய்து கொடுங்கள் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். இது சமைப்பதற்கு எளித

By Prem Kumar · 4/1/2024

தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். இது சமைப்பதற்கு எளிதானதும் கூட. ஆனால், ஏனோ பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை. வெண்டைக்காயினை நாம் இவ்வாறு சமைத்து கொடுப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

இதுவரை நீங்கள் வெண்டைக்காய் கொண்டு பொரியல், புளிக்குழம்பு செய்திருக்கலாம். ஆனால் வெண்டைக்காயைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் வெண்டைக்காய் கொண்டு சட்னி செய்தால், அது இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது வெண்டைக்காய் சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மனித உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். காய்கறிகளுள் வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடலாம் அல்லது வேறு விதமாக சமைத்தும் சாப்பிடலாம்.

வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதில் குறிப்பாக கூற வேண்டுமானால், செரிமானம் மேம்படும், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும், கண்களுக்கு நல்லது, சருமத்திற்கு நல்லது, உடல் பருமனைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது மற்றும் சிறுநீரக நோயைத் தடுக்கும். வழக்கமாக இட்லி,தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி , கார சட்னி, தக்காளி சட்னி தான் செய்கின்றோம். ஒரு மாற்றாக வெண்டைக்காய் வைத்து சுவையான சட்னி செய்யலாமா? இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சத்தான மற்றும் சுவையான சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட.

இதனையும் படியுங்கள் : ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்களேன்! சுடசுட கொடுத்தா ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும். அவ்வளவு ருசி!

Recipes AMP · Quick view
View full