ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்களேன்! சுடசுட கொடுத்தா ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும். அவ்வளவு ருசி!

- Advertisement -

இன்னைக்கு நம்ம சூப்பரான  ஒரு பொரியல் பண்ண போறோம். இந்த பொரியல் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா வெண்டைக்காய் பொரியல் தான்.  வெண்டைக்காய் ரொம்பவே சுவையான ஒரு காய் மட்டும் இல்லை அதே நல்ல நியாபக சக்தியை அதிகரிக்கும். பொரியல் செய்யும்போது எல்லாருக்கும் வரும் ஒரே பிரச்சினை அதோட கொழ கொழப்பு தன்மை தான். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல்  சுவையா இந்த வெண்டைக்காய் பொரியல் செய்ய போறோம். 

-விளம்பரம்-

சில குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிட ரொம்பவே அடம்பிடிப்பாங்க அப்படி அவங்க அடம் பிடிக்கிறப்போ அவங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் செய்து கொடுக்கும் போது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்கிறது பெரிய பிரச்சினை இப்படி செய்து கொடுக்கும் பொழுது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

இந்த வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு இப்படி ருசியான வெண்டைக்காய் பொரியல் எப்படி செய்யறது அப்படின்னு பாக்க இருக்கோம. நிறைய பேருக்கு வெண்டைக்காய் பொரியல் சாப்பிடணும்னு ஆசை இருக்கும் ஆனா அதோட கொழ கொழப்பு தன்மைக்காகவே சாப்பிடாம இருப்பாங்க.

அப்படி கொழகொழப்பு தன்மைக்காக  சாப்பிடாமல் இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த வெண்டைக்காய் செய்து கொடுங்க. ரொம்பவே நல்லா விரும்பி சாப்பிடுவார்கள். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல் ரொம்ப சுவையாவும் இருக்கும் . இந்த  வெண்டைக்காய் பொரியல் எப்படி செய்யலாமுனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
3.67 from 3 votes

வெண்டைக்காய் பொரியல் | Ladies Finger Poriyal In Tamil

சில குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிட ரொம்பவே அடம்பிடிப்பாங்க அப்படி அவங்க அடம் பிடிக்கிறப்போ அவங்களுக்குஇந்த மாதிரி வித்தியாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் செய்து கொடுக்கும் போது ரொம்பவிரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்கிறது பெரிய பிரச்சினைஇப்படி செய்து கொடுக்கும் பொழுது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த  வெண்டைக்காய் பொரியல் எப்படி செய்யலாமுனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ladies Finger Poriyal
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 கப் வேர்க்கடலை
  • 4 காய்ந்த மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை கழுவி எடுத்துவிட்டு ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
     
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்துஅதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதக்கிய பிறகு அதில் உப்பு ,நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய்களை சேர்த்து நன்றாக வதக்கிவிடவும். எண்ணெய் சேர்க்க தேவையில்லை.
  • வெண்டைக்காய் நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • ஐந்து நிமிடம் கலந்துவிட்ட பிறகு அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சூடாக பரிமாறினால் ருசியான வெண்டைக்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 192kcal | Carbohydrates: 18g | Protein: 39g | Cholesterol: 3mg | Potassium: 378mg | Iron: 2mg

இதையும் படியுங்கள் : சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்!  ஒரு சட்டி சோறும் காலியாகும்!

-விளம்பரம்-