சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்!  ஒரு சட்டி சோறும் காலியாகும்!

- Advertisement -

வெண்டைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. இதில் விட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தசோகை, மலச்சிக்கல், சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனை போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் வெண்டைக்காயில்  பலருக்கும் பிடிப்பதில்லை என்பதால் அவற்றை உணவில் பெருமளவில் தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு வெண்டைக்காயுடன் முந்திரி சேர்த்து செய்யும் இந்த பொரியலை செய்து கொடுக்கலாம்.

-விளம்பரம்-

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. வெண்டைக்காய் முந்திரி போட்டு இம்முறையில் செய்து கொடுத்தால், ருசியும், சத்துக்களும் கூடும். வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்க ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

வெண்டைக்காய் முந்திரி பொரியல் | Okra Cashew fry

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடியசக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின்உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. வெண்டைக்காய்முந்திரி போட்டு இம்முறையில் செய்து கொடுத்தால், ருசியும், சத்துக்களும் கூடும். வெண்டைக்காயில்இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்க ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படிசெய்து பாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Okra Cashew Stir Fry
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ வெண்டைக்காய்
  • 4 பூண்டு
  • 8 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன்.  துருவிய தேங்காய்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 வரமிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன். எண்ணெய்

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  •  பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்
  • பின்பு அதில் முந்திரியைப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை வதக்கியதும், வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெண்டைக்காய் நன்கு சுருங்கி வேகும் வரை வதக்கவும்.
  • வெண்டைக்காய் நன்கு வெந்ததும், இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் முந்திரி பொரியல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 1mg