Advertisement
சைவம்

ருசியான வெண்டைக்காய் மசாலா கூட்டு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற கூட்டு!

Advertisement

என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் கூட்டு, ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக

இதையும் படியுங்கள் : புதுவிதமான சுவையில் அப்பள கூட்டு செய்வது எப்படி ?

Advertisement
Advertisement

வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த வெண்டைக்காய் மசாலா கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த வெண்டைக்காய் மசாலா கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வெண்டைக்காய் மசாலா கூட்டு | Vendaikkai Masala Kottu

Print Recipe
நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த வெண்டைக்காய் மசாலா கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த வெண்டைக்காய் மசாலா கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Vendaikkai, வெண்டைக்காய்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 136

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 12 வெண்டைக்காய் பெ்டியாக நறுக்கியது
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 குடைமிளகாய் நறுக்கியது
  • 1 தக்காளி அரைத்த பேஸ்ட்
  • 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • 1 tsp சீரகம்
  • 5 முந்திரி பருப்பு
  • 1 கப் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து எண்ணெய் பசை நீங்கும் வரை வதக்கி பின் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்
    Advertisement
    ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • பின் அதில் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்கி விடுங்கள். பின்பு இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை போன பின் அரைத்த தக்காளி பேஸ்ட் மற்றும் தேவையின அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் தக்காளி பேஸ்ட் நன்கு கொதித்து வந்ததும்.
  • பின் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி நாம் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் சேர்த்து மசாலா வாடை கோகும் வரை நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளவும்.
  • பின்பு நாம் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி பின் 1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்து நாம் முதலில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கடாயை 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான வெண்டைக்காய் மசாலா கூட்டு தயார்.

Nutrition

Serving: 550gram | Calories: 136kcal | Carbohydrates: 21g | Protein: 12g | Fat: 6.8g | Saturated Fat: 0.5g | Cholesterol: 7mg | Sodium: 3mg | Potassium: 73mg | Fiber: 2.6g | Sugar: 1.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

4 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

6 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

9 மணி நேரங்கள் ago