Advertisement
சைவம்

காரசாரமான வெந்தய கார குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

என்னதான் அசைவ உணவுகளைக் கொண்டு கிரேவி, குழம்பு மற்றும் வறுவல் என செய்து சாப்பிட்டாலும். அதற்கு இணையாக சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் வெந்தயக் கார குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.

இதையும் படியுங்கள் : காரசாரமான மிளகு குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

ஆகையால் வெந்தைய காரக்குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதிய சுடு சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார குழம்பாக இருக்கும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த வெந்தய கார குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வெந்தய கார குழம்பு | Vendhaya Kara Kulambu Recipe in Tamil

Print Recipe
சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் வெந்தயக் கார குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ஆகையால் வெந்தைய காரக்குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதிய சுடு சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார குழம்பாக இருக்கும்.
Course Kulambu, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kara kulambu, கார குழம்பு
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
40 minutes
Servings 4 people
Calories 206

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

வறுத்து மசாலா அரைக்க

  • 1 tbsp சீரகம்
  • ¾ tbsp வெந்தயம்
  • 1 tbsp அரிசி
  • 1 tbsp மிளகு

குழம்பு செய்ய

  • 4 tbsp நல்லெண்ணெய்
  • ¾ tbsp கடுகு உளுந்த பருப்பு
  • ½ tbsp வெந்தயம்
  • 15 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 7 பல் பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 3 தக்காளி நறுக்கியது
  • ¼ tbsp மஞ்சள் துாள்
  • 1 மிளகாய் தூள்
  • 2 tbsp வறுத்து பொடி செய்த மசாலா
  • 2 டம்பளர் புளி கரைசல் நெல்லிக்காய் அளவு புளி
  • ½ டம்பளர் தண்ணீர்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அந்த கடாயில் ஒரு டீஸ்பூன் சீரகம், முக்கால் டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் அரிசி மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து
    Advertisement
    எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து பின் மிக்ஸியில் சேர்த்து பொடியா அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் நான்கு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும், முக்கால் டீஸ்பூன் அளவு கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.
  • பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் நாம் தோல் உரித்து வைத்திருக்கும் 15 சின்ன வெங்காயம் மற்றும் எட்டு பல் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் பூண்டு நன்கு வதங்கியதும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் மூன்று தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு டீஸ்பூன் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கி வந்ததும் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இரண்டு டம்ளர் அளவு புளி கரைசல் மற்றும் அரை டம்ளர் ஆளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு நன்றாக கொதிக்க வையுங்கள்.
  • பின்பு குழம்பு நன்றாக கொதித்து குழம்பும் எண்ணெயும் தனியாக பிரிந்து வரும் நேரத்தில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான வெந்தய கார குழம்பு இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 400gram | Calories: 206kcal | Carbohydrates: 14g | Protein: 11g | Fat: 2g | Saturated Fat: 1.2g | Sodium: 4mg | Potassium: 347mg | Fiber: 1g | Sugar: 0.9g
Advertisement
Prem Kumar

Recent Posts

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

40 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

3 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

13 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

15 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

16 மணி நேரங்கள் ago