மணக்க மணக்க ருசியான வெந்தய கீரை பருப்பு கடையல் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயக் கீரை. ஆம், இந்த கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோ

By Prem Kumar · 16/4/2024

நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயக் கீரை. ஆம், இந்த கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக வெந்தயக் கீரை இருக்கிறது. இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும்.

வெந்தயக் கீரையை சாப்பிட்டாலே பாதி நோய்கள் பறந்து போய்விடுமாம். அந்த அளவுக்கு ஆரோக்கியமானது, சத்தானது, மலிவானது. அன்றாட சமையலில் தவிர்க்க முடியாதது..!! ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சூட்டை குறைத்து, தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் ஆண்மை பலப்பட ஆண்கள் அடிக்கடி வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. வயிற்று பிரச்சனைகள், இடுப்பு வலியால் அவதிபடுபவர்கள் வெந்தயக் கீரையை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடலாம். கீரைக்கூட்டு, கீரை பொரியல், கீரை குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம்.

தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு கீரையைக் கொண்டு வதக்கியோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சுவையான கடையல் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். அதுவும் வெந்தயக் கீரையை கொண்டு கடையல் செய்தால் சூப்பராக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : வெந்தயக்கீரை வச்சு சுவையான ஆரோக்கியமிக்க பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்

Recipes AMP · Quick view
View full