சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான வெந்தய கீரை குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் து
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயக் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன.
ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சூட்டை குறைத்து, தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் ஆண்மை பலப்பட ஆண்கள் அடிக்கடி வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. வயிற்று பிரச்சனைகள், இடுப்பு வலியால் அவதிபடுபவர்கள் வெந்தயக் கீரையை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடலாம். கீரைக்கூட்டு, கீரை பொரியல், கீரை குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை வெந்தய கீரையில் இப்படி குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை வல்லாரை கீரை வாங்கினால் ருசியான வல்லாரை கீரை சாதம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!