பணம் தானாக உங்களுக்கு கிடைக்க ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை பயன்படுத்த வேண்டிய முறை!

நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கு பணம் என்பது நிச்சயம் தேவை. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு கூட நமக்கு நிறைய பணம் வேண்டும். என்னதான் பணம் சம்பாதித்தாலும் பணம் நம்மிடம் தங்காமல் போகும் அதற்கு பண ஈர்ப்பு தன்மை நம்மிடம் மிக மிக குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். எ

By Prem Kumar · 24/8/2025

நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கு பணம் என்பது நிச்சயம் தேவை. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு கூட நமக்கு நிறைய பணம் வேண்டும். என்னதான் பணம் சம்பாதித்தாலும் பணம் நம்மிடம் தங்காமல் போகும் அதற்கு பண ஈர்ப்பு தன்மை நம்மிடம் மிக மிக குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே பண ஈர்ப்பு தன்மையை அதிகரித்துக் கொள்ள ஒரு சில பரிகாரங்கள் உள்ளது. நம்மிடம் பணம் அதிகமாக சேர மகாலட்சுமி தாயார் குபேரர் போன்ற தெய்வங்களை நாம் வழிபாடு செய்வோம். ஆரோக்கியத்திற்காகவும் எதிரிகள் தொல்லை நீங்கவும் ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் நல்லது. அஞ்சுகிறேன் வழிப்படுவதன் மூலம் நமக்கு கிடைக்கப் போகும் சில நன்மைகளைப் பற்றியும் என்பது போல் பார்க்கலாம்.

பணம் அதிகமாக கிடைக்க செய்ய வேண்டியவை

நம்மிடம் பண ஈர்ப்பு அதிகரித்து பணவரவை அதிகரிக்க ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அகல் விளக்கு வைத்து அதில் நெய் ஊற்றி திரி போற்ற தீபம் ஏற்ற வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சொல்லி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்யலாம். ஆஞ்சநேயர் கோவில் செந்தூரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றாலே நமக்கு பிரசாதமாக துளசி தீர்த்தமும் செந்தூரமும் கொடுப்பது வழக்கம். அப்படி செந்தூரம் கொடுக்கும் போது அதனை கைகளில் வாங்காமல் ஆஞ்சநேயருக்கு சாட்சி இருக்கும் வெற்றிலை மாலையிலிருந்து ஒரு வெற்றிலையை வாங்கி அதில் அந்த செந்தூரத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து தினமும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

செந்தூரத்தை கொண்டு வீட்டில் எழுத வேண்டியது

நீங்கள் பணம் வைத்திருக்கக்கூடிய இடம் எதுவாக இருந்தாலும் அதில் செந்தூரத்தை வைத்து சுவஸ்திக் சின்னத்தை வரைந்து பிறகு அதன் மேல் பணத்தை வைக்க வேண்டும். வீட்டில் உள்ள அரிசி பானையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்தால் வீட்டில் வறுமைக்கு வாய்ப்பே இருக்காது. ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து குப்பை அதில் வைத்து விட்டால் உங்களுடைய கடன் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

ஸ்வஸ்திக் சின்னம்

ஒவ்வொரு வாரமும் பழைய ஸ்வஸ்திக் சின்னத்தை அழித்துவிட்டு புதிதாக சின்னத்தை வரைய வேண்டும். பொதுவாக ஸ்வஸ்திக் சின்னத்திற்கு பணத்தை ஈர்த்துக் கொடுக்கக் கூடிய ஒரு தன்மையும் உள்ளது. ஸ்வஸ்திக் சின்னத்தை செதுறுத்தைக் கொண்டு வீட்டில் சில இடங்களில் எழுதுவதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து பணம் அதிகரிக்கும் நம்பிக்கையோடு இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்து நிம்மதியான செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழுங்கள்.

இதனையும் படியுங்கள் : நவகிரக பாதிப்பை நீக்கக்கூடிய ஆஞ்சநேயர் வழிபாடு!

Recipes AMP · Quick view
View full