குழந்தைகளுடைய ஒழுக்கத்திற்காகவும் கல்வி அறிவிற்காவும் செய்ய வேண்டிய வழிபாடு!
இன்றைய காலகட்டத்தில் பணம் முக்கியமானதாக இருந்தாலும் அதற்கு நிகராக அறிவும் வேண்டும் அறிவு இருந்தால் தான் சம்பாதித்த பணத்தை கூட நம்மால் புத்திசாலித்தனமாக செலவு செய்ய முடியும். அறிவிற்கும் புத்திசாலித்தனத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடியவர் தான் சரஸ்வதி தேவி சரஸ்வதி தேவியின் முழுமைய
இன்றைய காலகட்டத்தில் பணம் முக்கியமானதாக இருந்தாலும் அதற்கு நிகராக அறிவும் வேண்டும் அறிவு இருந்தால் தான் சம்பாதித்த பணத்தை கூட நம்மால் புத்திசாலித்தனமாக செலவு செய்ய முடியும். அறிவிற்கும் புத்திசாலித்தனத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடியவர் தான் சரஸ்வதி தேவி சரஸ்வதி தேவியின் முழுமையான அருள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் செல்வ செழிப்பிற்கும் அறிவிற்கும் பஞ்சமே இருக்காது செல்வ செழிப்போடு மகிழ்ச்சியாக அறிவுடன் வாழ்வதற்கு சரஸ்வதி தேவியை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
குழந்தைகளின் கல்வி
பெற்றோர்கள் அனைவரும் தாம் படிக்காவிட்டாலும் தன்னுடைய குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைப்பார்கள் மேலும் டியூஷன் ஸ்பெஷல் கிளாஸ் என நிறைய விஷயங்களில் தங்களுடைய குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்களை அறிவுள்ள ஒழுக்கமான குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அந்த குழந்தைக்கு சரஸ்வதி தேவியின் அருள் என்பது நிச்சயமாக வேண்டும் சரஸ்வதி தேவியின் உடைய அருளை ஒரு குழந்தை முழுமையாக பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாடு இருக்கிறது
வழிபாடு செய்ய வேண்டிய நாள்
இந்த எளிமையான வழிபாட்டை அறிவிற்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானுக்குரிய புதன்கிழமை என்று செய்யலாம் மகாலட்சுமி தேவியாருக்கு சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமை என்று சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்கிறோமோ அதே போல் அறிவுர்க்காக சரஸ்வதி தேவிக்கு புதன் பகவானுக்கு உரிய புதன்கிழமை அன்று தான் இந்த வழிபாடு செய்ய வேண்டும் வீட்டில் சரஸ்வதி தேவியின் உருவப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
ஸ்ரீராமஜெயம்
நன்றாக எழுத படிக்க தெரிந்த குழந்தைகளாக வளர்ந்து இருந்தால் அவர்களுடைய கையால் புதன்கிழமை புதன் முறையில் ஸ்ரீராம் ஜெயம் எழுத வைப்பது மிகவும் சிறப்பானது மிகவும் சிறிய குழந்தைகளாக இருந்தால் சரஸ்வதி தேவிக்கு நந்திகாவ வட்டம் மாலையை வாங்கி குழந்தைகளின் கையால் சரஸ்வதி தேவிக்கு வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு சரஸ்வதி தேவிக்கான மந்திரங்களை கூறுவது சிறப்பானது. இந்த வழிபாட்டை புதன்கிழமை மட்டுமில்லாமல் சரஸ்வதி தேவிக்குரிய நட்சத்திரமான மூல நட்சத்திர நாள் அன்றும் சரஸ்வதி தேவி உடைய கோவிலுக்கு சென்றோம் செய்யலாம்
சரஸ்வதி தேவியின் உடைய மந்திரம்
குழந்தைகள் படிப்பது சிறந்து விளங்க வேண்டும் அறிவில் சிறந்து இருக்க வேண்டும் என்பதற்காக சரஸ்வதி தேவி உடைய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம்
யாதேவி சர்வ பூதேஷு வித்யாரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
என்கின்ற மந்திரத்தை 21 முறை சரஸ்வதியை நினைத்து குழந்தைகள் கூறும்போது அவர்களுடைய ஒழுக்கமும் அறிவும் சிறந்து விளங்கும் படிப்பிலும் போட்டி தேர்வுகளிலும் வெற்றி அடைவார்கள். முழு மனதோடு சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ செழிப்பும் குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டமும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : மாணவர்கள் நன்கு படிக்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்