Advertisement
சைவம்

இரவு உணவுக்கு பக்காவான கோதுமை மிளகு தோசை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

உடல் எடை குறைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவை கோதுமை  சப்பாத்தி. எப்பொழுதுமே சப்பாத்தி சாப்பிட்டு கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரே மாதிரியாக கோதுமை உணவை எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு சலிப்பு தட்டிவிட்டும். கோதுமையில் சப்பாத்தியா சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பு தட்டியவர்களுக்காக அதே கோதுமையை வைத்து மிளகு தோசை செய்து சாப்பிட வேண்டும்.

என்ன மிளகு தோசை இல்ல ரொம்ப  நிறைய சத்துக்கள் இருக்கு  காலோரிகள் கம்மியா இருக்கிறது. ஆகையால் கோதுமையில் எந்த விதமாக வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். கோதுமை உணவோடு  உடற்பயிற்சி செய்யும்போது கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. இந்த கோதுமை மிளகு தோசை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம். வெறும் கோதுமை மாவில் தோசை ஊற்றும் பொழுது ஒரு ரப்பர் போல ஒரு மாதிரி பசை போல்  இருக்கும் ஆனா அது கூட நாம் கொஞ்சம் அரிசிமாவு இதெல்லாம் கலந்து ஊற்றும் பொழுது நல்ல மொறு மொறுன்னு கிரிஸ்ப்பியா வரும்.

Advertisement

கோதுமையில் விட்டமின் ஈ செலினியம் போன்றவை இருப்பதினால் ரத்தத்தை சுத்திகரிக்கின்றன. கெட்ட கொழுப்பை நீக்குகின்றன. இத்தனை நன்மைகள் பொருந்திய கோதுமையை உடல் எடை குறைப்பில் முக்கிய உணவாக வைத்திருக்கிறார்கள். ஆகையால் இந்த உடல் குறைப்பில் கோதுமையை தோசையாக செய்து சாப்பிட்டு உடல் எடையை குறைப்பதோடு ருசியாகவும் சாப்பிட்டு மகிழ்ச்சி பெறலாம். வாருங்கள் இந்த கோதுமை மிளகு தோசை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

கோதுமை மிளகு தோசை | Wheat pepper Dosa In Tamil

Print Recipe
கோதுமையில்சப்பாத்தியா சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பு தட்டியவர்களுக்காக அதே கோதுமையை வைத்து மிளகு தோசை செய்து சாப்பிட வேண்டும்.
Advertisement
என்ன மிளகு தோசை இல்ல ரொம்ப  நிறையசத்துக்கள் இருக்கு  காலோரிகள்கம்மியா இருக்கிறது. ஆகையால் கோதுமையில் எந்த விதமாக வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். கோதுமை உணவோடு  உடற்பயிற்சிசெய்யும்போது கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. இந்த கோதுமை மிளகு தோசை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம். வெறும் கோதுமை மாவில் தோசை ஊற்றும் பொழுது ஒரு ரப்பர் போல ஒரு மாதிரி பசை போல்  இருக்கும். வாருங்கள் இந்த கோதுமை மிளகு தோசை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Wheat Pepper Dosa
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 55

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிது அளவு
  • உப்பு  தேவையான அளவு
  • எண்ணெய்  தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து மெலிதான தேசையாக ஊற்ற  வேண்டும். பின் தோசை மீது எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திரும்பி போட்வும்.
  • இப்போது தோசை எடுத்து ப்ளேட்டில் வைத்து பரிமாறினால் சூடான ருசியான கோதுமை மிளகு தோசை தயார். இந்த தோசை தேங்காய் சட்னியுடன் அட்டகாசமாக இருக்கும்.

Nutrition

Serving: 2g | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

8 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

14 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

24 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago