சொந்த வீடு வாங்க ஸ்தல சயண பெருமாள் கோவில் வழிபாடு!!
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும் அதற்கு என்னென்ன செய்யலாம் என்று ஒரு சிலர் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி யோசித்துக் கொண்டே இருந்தால் சென்னைக்கு அருகாமையில் இருந்தால் இந்த ஒரு கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து பாருங்கள். இந்த கோவிலுக்கு நிற
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும் அதற்கு என்னென்ன செய்யலாம் என்று ஒரு சிலர் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி யோசித்துக் கொண்டே இருந்தால் சென்னைக்கு அருகாமையில் இருந்தால் இந்த ஒரு கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து பாருங்கள். இந்த கோவிலுக்கு நிறைய சிறப்புகள் உள்ளது அது பல பேருக்கு தெரியாது சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் பலரும் முருகரைதான் வழிபாடு செய்வார்கள். ஆனால் சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் கூட உங்களுக்கு வீடு வாங்கும் யோகம் கிடைக்கும் அந்த கோவிலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்தல சயன பெருமாள் கோவில்
மகாபலிபுரத்தில் உள்ள இந்த ஸ்தல சயன பெருமாள் கோவிலுக்கு செல்வது மிகவும் சிறப்பானது. இந்த கோவிலில் பெருமாள் நிலத்திலேயே படுத்து காட்சி தருவார் இதனால்தான் இவருக்கு ஸ்தல சயன பெருமாள் என்று பெயர் வந்தது. ஸ்தலம் என்றால் தரையிலேயே படுத்துக்கிடக்கும் பெருமாள் என்று பெயர். இந்த கோவிலில் இருக்கும் தாயாருக்கு நில மங்கை தாயார் என்று ஒரு பெயர் உள்ளது. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர நிலம் வாங்குவதற்கு இந்த கோவிலில் பரிகாரம் செய்வது சிறந்தது.
சொந்த வீடு வாங்க சிறந்த கோவில்
இந்த கோவிலுக்கு ஒரு சிலர் பல முறை சென்று இருப்பார்கள். ஆனால் இந்த கோவிலுக்கான சிறப்பு ஒரு சிலருக்கு தெரியாமலேயே இருந்திருக்கும். இனி இந்த கோவிலுக்கு சென்று நிலம் வாங்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு கூடிய விரைவிலேயே சொந்த வீடு நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களுக்கான பலன்கள் கிடைக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முழுமனதோடு பிரார்த்தனை செய்து ஸ்தல சயன பெருமாள் ஆசியையும் நில மங்கை தாயாரின் ஆசியையும் பெற்று வாருங்கள்.
இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க காமாட்சி விளக்கு வழிபாடு