குடும்பத்தில் நன்மைகள் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு!!

துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும் என்று பலர் கூற கேட்டிருப்போம். துர்கையம்மன் ராகு காலத்தில் ஏற்பாடு செய்யும் போது நம் வேண்டுதல்கள் அனைத்துமே நிறைவேறும் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகு நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும்போது துர்க்கை அம்மனுடைய அருள் நமக்

By Prem Kumar · 12/1/2025

துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும் என்று பலர் கூற கேட்டிருப்போம். துர்கையம்மன் ராகு காலத்தில் ஏற்பாடு செய்யும் போது நம் வேண்டுதல்கள் அனைத்துமே நிறைவேறும் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகு நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும்போது துர்க்கை அம்மனுடைய அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் ஒரு பலன் கிடைக்கும் அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

துர்க்கை அம்மன்

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் துன்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் அவற்றை சமாளித்து அதிலிருந்து வெளியே வந்து வெற்றி காண்பது தான் வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கான வழி. துன்பங்கள் துயரங்களிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்கு நமக்கு மன தைரியம் கண்டிப்பாக வேண்டும். அந்த மன தைரியத்தை நமக்கு கொடுக்கக்கூடிய தெய்வம் தான் துர்க்கை அம்மன். துர்கை அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பானது குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்ததற்கும் வீட்டில் நன்மைகள் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு செய்யலாம்.

துர்கையம்மன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை என்று வரக்கூடிய ராகு கால நேரத்தில் மாலை 4:30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய துர்க்கை அம்மன் படத்திற்கு முன்பாக வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கு ஏற்றி உங்களால் முடிந்த அளவிற்கு ஏதாவது ஒரு இனிப்பை நெய்வேதியம் ஆக வைக்க வேண்டும். முடியாதவர்கள் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை மட்டும் வைத்துக்கொள்ள வழிபாடு செய்யலாம்.

துர்கை அம்மன் மந்திரம்

பிறகு துர்க்கை அம்மனுக்குரிய மந்திரமான “ஓம் தும் துர்க்கையே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை மனதார கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். தமிழரில் வைக்கக் கூடிய தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துவிட்டு பிறகு அதனை அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் அசைவம் சாப்பிடுவது வழக்கம்‌. ஆனால் இந்த வழிபாட்டை செய்யும் போது வீட்டில் நிச்சயமாக அசைவம் எடுக்கவும் கூடாது அசைவம் சாப்பிடவும் கூடாது. மனதார இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை செய்தால் குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளும் பெருகும்.

இதனையும் படியுங்கள் : சக்தி வாய்ந்த அம்மன் துர்க்கையின் வழிபாடு!

Recipes AMP · Quick view
View full