கொடுத்த கடனை திரும்ப பெற காலபைரவர் வழிபாடு!!

கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்கு பைரவர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இழந்தவற்றை திரும்ப பெறுவதற்கும் இந்த பரிகாரம் உதவும். காலச்சக்கரத்தின் அதிபதியாக விளங்கும். பைரவரை வேண்டி செய்யப்படும் இந்த வழிபாடு வறுமைகள் நீங்க கொடுத்த கடன் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டெடுப்பதற்கு உ

By Prem Kumar · 28/6/2025

கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்கு பைரவர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இழந்தவற்றை திரும்ப பெறுவதற்கும் இந்த பரிகாரம் உதவும். காலச்சக்கரத்தின் அதிபதியாக விளங்கும். பைரவரை வேண்டி செய்யப்படும் இந்த வழிபாடு வறுமைகள் நீங்க கொடுத்த கடன் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டெடுப்பதற்கு உதவியாக இருக்கும். அந்த வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள் இந்த நாள் அன்று செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளும் சிறப்பான பலன்களை கொடுக்கக் கூடியது. தேய்பிறை அஷ்டமி என்று மாலை நேரத்தில் சிவன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பெரும்பாலான பைரவர் ஆலயங்களில் தேய்பிறை அஷ்டமி அன்று அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். ஒரு மண் அகல் விளக்கு எடுத்து அதில் 27 கருப்பு மிளகுகளை வெள்ளைத் துணியில் முடிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும் அதனை திரி போல் திரித்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அந்த தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வர மற்றவர்களிடம் கொடுத்த பணம் திரும்ப வரும்.

பைரவர் வழிபாடு

ஒரு சிலர் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்றுவார்கள். பைரவருக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்வது, எலுமிச்சை பழங்களை கோர்த்து மாலையாக சாற்றுவது, விசேஷ பலன்களை கொடுக்கும். வைரவருக்கு தேன் கரும்புச்சாறு அரகஜா புனுகு அத்தர் போன்ற பொருட்களை வாங்கி அபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. இவற்றில் சிறிதளவு வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வதால் பணப்பிரச்சினைகள் தீரும். கடன் கொடுத்தவர்கள் அவர்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து வைரவரை வழிபாடு செய்யலாம். இந்த வழிபாடு மனப்பயத்தை நீக்கும் பணப்பிரச்சனைகள் கடன் தொல்லைகளை நீக்கும்.

ராகு கால வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை ராகு நேரத்தில் 4.30 மணி முதல் 6:00 மணி வரையில் பைரவர் சன்னதிக்கு சென்று வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது கடன் பிரச்சனையை தீர்க்கும். ஸ்வர்ணாகர்ஷண பைரவர் செல்வ வளத்தை அள்ளிக் கொடுப்பார். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்வது சிறப்பு. செல்வ வளம் பெருக உதவும். தாமரை மலர் மாலை வில்வ இலை மாலை சாற்றையும் வழிபாடு செய்யலாம்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு

வீட்டில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் படத்தை அல்லது சிலையை வீட்டில் வைத்து தினமும் தீப தூப ஆராதனை செய்து வழிபாடு செய்வது நல்லது. வியாபாரிகள் தங்களுடைய கல்லாப்பெட்டியில் இவரை வைத்து பூஜை செய்வது வியாபாரம் செழிக்க உதவும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் பாராயணம் செய்வது பணவரவை அதிகரித்துக் கொடுக்கும். பௌர்ணமி அன்று இரவு 8 மணிக்கு தீபம் ஏற்றி 18 முறை இந்த அஷ்டகத்தை பாராயணம் செய்யலாம். ஒன்பது பௌர்ணமிகள் தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் கல் உப்பு வெந்தயம் கருப்பு எள் போன்றவற்றை வெள்ளை துணியில் கட்டி வீட்டில் தென்மேற்கு மூலையில் வைத்தால் கொடுத்த பணம் திரும்பவும் கிடைக்கும். எந்த ஒரு வழிபாடும் முழு நம்பிக்கையுடனும் மனத்தூய்மையுடனும் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் பரிகாரங்கள் எனவே நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : கஷ்டங்களை நீக்கும் கால பைரவர் வழிபாடு

Recipes AMP · Quick view
View full