தரித்திரம் நீங்க தை மாத மகாலட்சுமி வழிபாடு!!

தை மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது. தை மாதம் பிறக்கும் போதே தமிழர் திருநாளாக அனைவராலும் கொண்டாடப்பட்டது அப்படிப்பட்ட சிறப்பான தை மாதத்தில் மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்கு பல வழிகள் உள்ளது. இந்த தை மாதத்

By Prem Kumar · 24/1/2025

தை மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது. தை மாதம் பிறக்கும் போதே தமிழர் திருநாளாக அனைவராலும் கொண்டாடப்பட்டது அப்படிப்பட்ட சிறப்பான தை மாதத்தில் மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்கு பல வழிகள் உள்ளது. இந்த தை மாதத்தை மகாலட்சுமி தாயாரை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவது அந்த வருடம் முழுவதும் நாம் நன்றாக வாழ்வதற்கு வழி செய்யும். துளசி செடியை மகாலட்சுமி தாயார் ஆக நினைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது இதே போல் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு பல வழிகள் உள்ளது. மேலும் சில குறிப்பிட்ட நாட்கள் மஹாலக்ஷ்மி தாயாரை வழிபடுவதற்கு உகந்த நாட்களாக உள்ளது. தரித்திர நிலை முழுவதுமாக நீங்குவதற்கு மகாலட்சுமி தாயார் எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள்

பொதுவாக வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தயாருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே தை மாதத்தில் வரக்கூடிய அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது சிறந்தது. சூரிய நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திர மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களிலும் மஹாலக்ஷ்மி தாயாரை வழிபடுவதற்கு சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. அப்படி செய்தால் செல்வ வளம் அதிகமாகவே இருக்கும்.

சுவாதி நட்சத்திர வழிபாடு

சுவாதி நட்சத்திரம் என்பது சூரியனுக்கு உரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. தை மாதத்தின் ஒன்பதாவது நாள் நவமி நாளன்று ராமருக்கு உகந்த திதி என்று மகாலட்சுமி தயாருக்கு பூஜை செய்து வழிபடுவது சிறந்தது. மேலும் புதன்கிழமை பெருமாளுக்கு உகந்த தினம் எனவே அந்த நாளில் வழிபடுவது மிக மிக சிறந்தது.

வழிபாடு செய்யும் முறை

அனைவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்தை எடுத்து துடைத்து சந்தனம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பூக்களால் மகாலட்சுமி தாயார் படத்திற்கு அலங்காரம் செய்து மகாலட்சுமி தாயாருக்கு உகந்த ஸ்லோகமான ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரத்தை ஜனவரி 22ஆம் தேதி ஒரு தடவை படிக்க வேண்டும் அடுத்த நாள் இரண்டு தடவை அதற்கு அடுத்த நாள் மூன்று தடவை என அடுத்த மாத சுவாதி நட்சத்திரம் வரும் வரைக்கும் தினமும் வீட்டில் உச்சரிக்க வேண்டும் மொத்தம் 27 முறை உச்சரிக்க வேண்டியதாக இருக்கும். மாசி மாதம் வரக்கூடிய சுவாதி நட்சத்திர தினத்திற்கு முந்தைய நாள் இந்த வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம். மேலும் இதனை படிக்கும் போது மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டு பிரசாதத்தையும் நெல்லிக்கனி தீபத்தையும் ஏற்ற வேண்டும். மகாலட்சுமி தாயார் உடைய முழு அருளையும் பெறுவதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் இருந்தாலும் இந்த ஒரு வழிபாட்டு முறையை பின்பற்றினால் நிச்சயமாக வாழ்க்கையில் செல்வ செழிப்போடு வாழ முடியும்.

இதனையும் படியுங்கள் : செல்வத்தை அள்ளி தரும் மகாலட்சுமி மற்றும் குபேரன்

Recipes AMP · Quick view
View full