வராகி அம்மன் கனவில் வருவதற்கு செய்ய வேண்டிய வழிபாடு!!
என்னதான் அனைவருக்கும் பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் வர முடியாத சில பிரச்சினைகள் ஒரு சிலருக்கு நிறையவே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு தெய்வத்திடம் மட்டுமே நாம் சரணாகதி அடைவோம். ஏதாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்காதா என்று பல தெய்வங்களை நாம் வழி
என்னதான் அனைவருக்கும் பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் வர முடியாத சில பிரச்சினைகள் ஒரு சிலருக்கு நிறையவே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு தெய்வத்திடம் மட்டுமே நாம் சரணாகதி அடைவோம். ஏதாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்காதா என்று பல தெய்வங்களை நாம் வழிபடுவோம் ஆனால் மிகவும் துடிப்பான தெய்வமாக திகழக்கூடிய வராகி அம்மனிடம் பிரச்சனைகளை கூறி வழிபாடு செய்வதன் மூலம் வராகி அம்மனே நம்முடைய கனவுகள் வந்து நம்மிடம் பேசும் அளவிற்கு அந்த வழிபாட்டின் பலன் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
வராகி அம்மன் வழிபாடு
எந்த தெய்வத்தை நாம் முழுமனதோடு வழிபாடு செய்தாலும் அந்த தெய்வம் நம்மிடம் வந்து ஏதாவது ஒரு ரூபத்தில் பேசும் நமக்கு இக்கட்டான சூழ்நிலை இருக்கும் போது அந்த தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நமக்கு உதவி செய்யும் என்று கூறப்பட்டிருக்கும். அந்த வகையில் நாம் வராகி அம்மனை வழிபாடு செய்துவிட்டு அம்மனின் மந்திரத்தை 11 நாட்கள் கூறி வந்தால் முடியாத பிரச்சனைக்கும் உரிய தீர்வுகள் கிடைக்கும்.
வழிபாடு செய்யும் முறை
இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய பஞ்சமி அல்லது அஷ்டமி தினத்தில் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 11 நாட்கள் இந்த வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நம்முடைய வீட்டில் வராகி அம்மனின் படம் அல்லது சிலை இருக்க வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்யலாம் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு வராகி உங்களுக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து நெய்வேதியமாக பானகம் வைக்க வேண்டும்.
மந்திரம்
“ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி
அகோரே ஸ்வப்னம் தர்ஷய ட்டஹ
ட்டஹ ஸ்வாஹா”
வராகி அம்மனுக்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை 1100 முறை உச்சரிக்க வேண்டும். நம்முடைய பிரச்சினைக்குரிய தீவை வாராஹி அம்மன் நம்முடைய கணவல் வந்து நம்மிடம் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்வப்ன வராகி அம்மனை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் போது வீட்டில் உள்ள அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டும் இது வழிபாட்டை செய்ய தொடங்கிய பின்பு எந்த ஒரு அசுப காரியங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது. யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினை குறிய தீர்வை தரக்கூடிய வாராஹி அம்மனை முழு மனதோடு எந்தவித சந்தேகமும் இல்லாமல் அன்போடும் பாசத்தோடும் வழிபாடு செய்ய வராகி அம்மன் நமக்காக இறங்கி வந்து நம் பிரச்சினையை தீர்த்து வைப்பார்.
இதனையும் படியுங்கள் : வாராகி அம்மனுக்கான ரகசிய பூஜை