குலதெய்வம் வீட்டிற்கு வர செய்ய வேண்டிய வழிபாடு!!

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெய்வம், குல தெய்வமாக இருக்கும். குலத்தைக் காக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடிய குல தெய்வத்தின் அருளும் நமக்கு இருந்தாலே வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வீட்டில் செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கா

By ·

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெய்வம், குல தெய்வமாக இருக்கும். குலத்தைக் காக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடிய குல தெய்வத்தின் அருளும் நமக்கு இருந்தாலே வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வீட்டில் செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்காமல் காரிய தடை குழந்தை பாக்கிய தடை என எதனைத் தொட்டாலும் தடை உண்டாகி கொண்டிருந்தால் குல தெய்வத்தின் அருள் இல்லை என்று அர்த்தம். வீட்டில் அமைதி இல்லாமல் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குலதெய்வத்தினுடைய அருள் இல்லை என்ற அர்த்தம். எனவே வீட்டிற்கு குல தெய்வத்தை அழைத்து வருவதற்கு குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கு இந்த வழிபாட்டு முறையை செய்து பாருங்கள்.

குலதெய்வம்

அனைவருக்குமே அவர்களுடைய குலதெய்வம் யார் என்று தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாது அப்படி இருக்கும் நிலையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபட்டால் கூட குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்கும். பல தெய்வத்தின் உடைய படம் சிலை எதுவுமே இல்லை என்றாலும் குலதெய்வத்தின் பெயர் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். கண்டிப்பாக குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைக்க முடியும்.

குலதெய்வ வழிபாடு

வீட்டின் பூஜை அறையில் நாம் எப்போதுமே ஏற்றக்கூடிய தீபத்தை தவிர்த்து குலதெய்வத்திற்கு தனியாக ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபம் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபமாக இருக்கலாம். பிறகு வாசனை நிறைந்த ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றை ஏற்றி வைத்து குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளலாம். தீப சுடரொளியை பார்த்து குலதெய்வத்தினுடைய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரம் “ஓம் குல தேவதாப்யோம் நமஹ”என்ற மந்திரத்தை தீபச்சுடரொளியை பார்த்து குலதெய்வத்தை நினைத்து ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வத்தினுடைய அருள் கிடைப்பதோடு குலதெய்வம் வீட்டுக்கு வந்து அனைத்து ஆசிகளையும் வழங்குவார்.

இதனையும் படியுங்கள் : குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தடை வருகிறதா? இப்போது இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்!

Recipes AMP · Quick view
View full