குலதெய்வ வசியம் உண்டாக செய்ய வேண்டிய வழிபாடு!!

எந்த தெய்வத்துடைய அருள் நமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குலதெய்வத்துடைய அருள் முழுமையாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையின் நல்லவிதமாக அமையும். மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதற்கு கூட குலதெய்வத்தின் அருள் நமக்கு கண்டிப்பாக தேவைப்படும். அதனால் தான் பலரும் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவ

By Prem Kumar · 29/6/2025

எந்த தெய்வத்துடைய அருள் நமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குலதெய்வத்துடைய அருள் முழுமையாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையின் நல்லவிதமாக அமையும். மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதற்கு கூட குலதெய்வத்தின் அருள் நமக்கு கண்டிப்பாக தேவைப்படும். அதனால் தான் பலரும் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட குலதெய்வத்தை வசியம் செய்வதற்கு ஆணி அமாவாசை அன்று இந்த ஒரு வழிபாட்டை செய்வது நல்லது. அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குலதெய்வ வழிபாடு

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்படாமல் இருப்பதற்கு விநாயகரை வழிபாடு செய்வோம். அதேபோல் தான் விநாயகர் பெருமானை வழிபாடு செய்துவிட்டு அடுத்ததாக நம்முடைய குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுது தான் குலதெய்வத்தின் அருளால் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நம்மால் வெற்றியைப் பெற முடியும். குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகுதான் மற்றும் தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. சாதாரணமாக நாம் ஏதாவது ஒரு தெய்வத்தை நினைத்து விரதம் இருக்கப் போகிறோம் என்றால் கூட குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுது தான் அந்த விரதத்தின் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் அந்த அளவிற்கு குலதெய்வ வழிபாடு சிறந்தது. குலதெய்வத்தை வசியம் செய்வதற்கு அமாவாசை மிகவும் சிறந்த நாள். அமாவாசை தினத்தில் ஒருவர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார்கள் என்றால் நிச்சயமாக அந்த வழிபாட்டின் மூலம் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அமாவாசை தினத்தில் குலதெய்வத்தை வசியம் செய்வதற்காக வீட்டில் இருந்து செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பார்க்கலாம்.

குலதெய்வ வசிய வழிபாடு

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு பச்சரிசி தேவைப்படும் பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு கையில் எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு மந்திரத்தை கூற வேண்டும். குலதெய்வத்தின் பெயர் உங்களுக்கு தெரிய வேண்டும் அப்பொழுது தான் இந்த மந்திரத்தை கூற முடியும். குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை என்றால் குலதெய்வமே என்று பொதுவாக கூறியும் இந்த மந்திரத்தை சொல்லலாம். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து முடித்த பிறகு கையில் வைத்துள்ள பச்சரிசியை எறும்புகள் இருக்கக்கூடிய இடத்தில் போட வேண்டும். நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி குலதெய்வத்தின் அருளையும் பெற முடியும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் கிலிம் குலதெய்வத்தினுடைய பெயர் நம”

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து வர நிச்சயமாக குலதெய்வத்தினுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : கடனிலிருந்து விடுபட அரசமர தீப வழிபாடு

Recipes AMP · Quick view
View full