குருவின் பார்வை பெறும் ராசிகள்! இனி இந்த ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான்!!

ஜோதிட சாஸ்திரத்தின் படி செல்வம் மற்றும் ஞானத்தின் கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். குருபகவான் தேவர்கள் குருவாக திகழ்ந்த வருகின்றார். அறிவின் நாயகன், செல்வத்தின் அதிபதி, செல்வங்கள

By ·

ஜோதிட சாஸ்திரத்தின் படி செல்வம் மற்றும் ஞானத்தின் கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். குருபகவான் தேவர்கள் குருவாக திகழ்ந்த வருகின்றார். அறிவின் நாயகன், செல்வத்தின் அதிபதி, செல்வங்களின் வள்ளல் என பல வகையில் நம் வாழ்க்கைக்கு அருள் புரியும் குரு பகவான் நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். இவர் பல வித நற்பலன்களை அளிக்கும் சுப கிரகம் ஆவார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்று இருக்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கும். குரு சஞ்சரிக்க கூடிய இடத்தை விட குருவின் பார்வை கிடைக்கக்கூடிய இடங்கள் மிகச் சிறப்பான பலனை தரக்கூடியதாக அமையும் என்கின்றனர் ஜோதிடர்கள். அந்த வகையில் யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம். 

ரிஷபம் 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடக்கும். அதேபோல், புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணி இடத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பணியிடத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் விரும்பிய முறையில் முடிக்கப்படும். காதல் உறவுகளில் நெருக்கம் இருக்கும். தொடர்ந்து புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கடகம்

குருபகவானின் இடமாற்றத்தால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் சாத்தியமாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் அன்பும் நம்பிக்கையும் நிலவும். உறவுகள் முன்பை விட வலுவாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று திரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

கன்னி 

கன்னி ராசிகாரர்களுக்கு குருபகவான் ராசி மாற்றம் தன்னம்பிக்கையை அதிகரித்து கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வருமானத்தில் இருந்த குறையும் இருக்காது என்றும் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும். உங்கள் திட்டங்கள் வெற்றிகரமாகவும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு வலுவடையும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். மற்றவர்களிடத்தில் நல்ல பெயர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் வரும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி – கெடு பலன்கள் பெற போகும் ராசி

Recipes AMP · Quick view
View full