2026ல் நிகழவிருக்கும் கேதுவின் பெயர்ச்சியால் இந்த ஆண்டு முழுவதும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!
இந்த ஆண்டு பல கிரகங்களின் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலையும், சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலையும் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் ஒருவரின் தொழில், நிதிந
இந்த ஆண்டு பல கிரகங்களின் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலையும், சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலையும் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் ஒருவரின் தொழில், நிதிநிலை மற்றும் உறவுகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநிலையையும் ஆழமாகப் பாதிக்கும். மேலும், குடும்பத்திலும் சில பிரச்னைகள் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. அந்த வகையில் வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக குறிக்கப்படும் கேது கிரகத்தின் ஒவ்வொரு அசைவும் முக்கியமான ஒரு நிகழ்வாக குறிக்கப்படுகிறது. அசுப கிரகங்களில் ஒன்றாக குறிக்கப்படும் இந்த கேதுவின் பெயர்ச்சி பலருக்கும் அச்சத்தையே கொடுக்கும். 2026-ஆம் ஆண்டு முழுவதும் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் கேது குறிப்பிட்ட 5 ராசிகளின் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினரின் 5-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் கேது, கல்வி சார்ந்த விஷயங்களில் பின்னடைவை கொண்டு வருகிறார். அந்த வகையில் உங்கள் குழந்தையின் கல்வி சார்ந்த விஷயங்கள் எதிர்மறை பதில்களை அளிக்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவார்கள். ஆடம்பர செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளுக்கு இடையே அவ்வப்போது சண்டைகள், வாக்குவாதங்கள் வந்துச் செல்லும். கடன், பணம் மற்றும் தொழில் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனை வரும். தொழிலில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியினரின் 4-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த கேது பெயர்ச்சி, ரிஷப ராசியினரின் சொத்து சார்ந்த வழக்குகளில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அண்டை வீட்டாருடன் காணப்பட்ட நிலப் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். நிதி சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். காதல் உறவில் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும், விரிசல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நிலம், சொத்து மற்றும் தொழிலில் விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் சற்று பின்னடைவை சந்திப்பார்கள். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியினரின் வாழ்க்கையில் தேவையற்ற செலவுகளை அதிகரிக்கும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. கன்னி ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 12-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த கேது பெயர்ச்சி, கன்னி ராசி கொண்டவர்களின் மருத்துவ செலவுகளை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்கள் உங்கள் சேமிப்பை குறைக்கும். குடும்ப உறவுகளுடன் மனஸ்தாபங்கள் காணப்படும். பூர்விக சொத்து கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளை எதிர்பார்க்கலாம். நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை விஷயங்களிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 9-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த கேது பெயர்ச்சி, தனுசு ராசியினரின் தொழில் வாழ்க்கையில் பெரிய தடைகளை கொண்டு வருகிறது. முதலீடுகள் அனைத்தும் எதிர்மறையான பலன்களை அளிக்கும். பயணங்கள், விபத்துக்களை உண்டாக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு காணப்படலாம். அப்பா வழி உறவுகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன்பிறந்வர்கள் இடையே, தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் காணப்படலாம். தவறான தொடர்புகளால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 7-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. குறித்த இந்த மாற்றம் ஆனது, உங்கள் திருமண வாழ்க்கையில் தடைகளை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்கு மத்தியில் பிரச்சனைகள் மற்றும் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும். குடும்பத்தின் நிதி பிரச்சனைகள் அதிகரிக்கும். பணிகளில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். தனிப்பட்ட உறவு மற்றும் திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களின் போது சிறு விபத்துகள் ஏற்படலாம். திருமண வாழக்கையில் தடைகள் உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்