ஒரு வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் சூரிய பகவான் இனி இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களும், இணைப்புகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். அந்த வகையில் தற்போது சூரியன் சனி பகவானின் கும்ப ராசியில் உள்ளார். இந்நிலையில் சூரியன் மார்ச் 15 ஆம் தேதி குரு பக
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களும், இணைப்புகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். அந்த வகையில் தற்போது சூரியன் சனி பகவானின் கும்ப ராசியில் உள்ளார். இந்நிலையில் சூரியன் மார்ச் 15 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சனி பகவானும் உள்ளார். இந்த சூரியனுக்கும், சனி பகவானுக்கும் பகை உணர்வு உள்ளது. இருந்தாலும், இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். கிட்டத்தட்ட 1 வருடம் கழித்து மீன ராசிக்குள் சூரியன் நுழைந்துள்ளார். இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சவாலான விஷயங்களை கொடுக்க இருக்கிறது. அதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
சிம்மம்
மார்ச் மாத சூரிய பெயர்ச்சியின் போது சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் பலவிதமான சவால்களை எதிர்கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமைய தாமதம் ஏற்படும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் தேவையற்ற மனவருத்தம் ஏற்படும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களுடன் பிறருக்கு இணக்கமான சூழல் இருக்காது. தேவையற்ற செலவுகள் செய்து கஷ்டப்படுவீர்கள்.
விருச்சிகம்
மார்ச் மாத சூரிய பெயர்ச்சியின் போது விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். படைப்பாற்றல் குறையும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது இடம் மாற்றம் கிடைக்காமல் வருந்துவீர்கள். வீண் வழக்குகளில் ஈடுபடுவதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் அதனால் உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றம் இருக்காது.
மீனம்
மார்ச் மாத சூரிய பெயர்ச்சியின் போது மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எதிலும் அவசரத்தைக் கைவிட வேண்டும். உங்கள் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும். சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழல் இருக்கும். பணிச்சுமை காரணமாக, கவலை காரணமாக உங்கள் உடல் நலம் மற்றும் உணவு விஷயத்தில் அக்கறை செலுத்த முடியாத சூழல் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்