புதனின் மாற்றத்தால் 2026ல் பண மழையில் நனைய போகும் ராசிகள் இவர்கள் தான்!!
2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரப்போகிற புது ஆண்டில் தங்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைத்து ராசிக்காரர்களிடம் இருக்கும். 2026ஆம் ஆண்டு பல கிரகங்களின் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. அந்த வகையில் நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர்
2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரப்போகிற புது ஆண்டில் தங்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைத்து ராசிக்காரர்களிடம் இருக்கும். 2026ஆம் ஆண்டு பல கிரகங்களின் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. அந்த வகையில் நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் பகவான் 2026ல் தனது நிலையை மாற்றுவதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்களை அள்ளி வழங்கப் போகிறார். புதனின் மாற்றத்தால் புத்தாண்டு முதல் பணமழையில் நனையப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
புத்தாண்டு பிறந்ததுமே மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் புதிய பாதைகளைத் திறந்து விடுவார். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த நிதி நெருக்கடிகள் நீங்கி, வருமானம் பல மடங்காக உயரும். உழைப்பிற்கான பலன்கள் படிப்படியாகக் கிடைக்கத் தொடங்கும். குடும்ப அமைதி மற்றும் தொழில் வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படலாம். பணி நிமித்தமாகவோ, வேலை நிமித்தமாகவோ வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகளிலிருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அதிபதியே புதன் என்பதால், இந்த புத்தாண்டு உங்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது. உங்கள் பேச்சாற்றலால் பெரிய ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தம்பதியினரிடையே அந்நியோன்யமும் அதிகரிக்கும். திருமண தடைகள் நீங்கி, பொருத்தமான சம்மந்தம் கைக் கூடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்னைகள் தீரும். முதலீடுகளில் இருந்து வருமானம் அதிகம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி உத்தியோகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை தேடி வரும். வெளிநாட்டில் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரம் உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்ற உதவும். நிலுவையில் இருக்கும் கடனை அடைக்க வாய்ப்பு வரும். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே இருந்த வந்த சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். திடீர் பணவரவு அல்லது முதலீடுகளிலிருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் யோகமான இடத்தைப் பிடிப்பதால், தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரக்கூடும். நிதி, சமூக, கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை மேம்படும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையிலும் முன்னேற்றம் காண்பீர்கள். கிடப்பில் போடப்பட்ட பணிகள் நிறைவடையும். வீடு, வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. பல்வேறு மூலங்களிலிருந்து பணவரவு அதிகரிக்கும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணி இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : தனுசு ராசியில் சுக்கிர பெயர்ச்சி இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!