விருச்சிகத்தில் பயணம் செய்யும் செவ்வாய் பகவான் இனி இந்த ராசிகளுக்கு வெற்றி மழை தான்!!
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், ஒன்பது கிரகங்களில் செவ்வாய் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. மேலும், செவ்வாய் சிவப்பு கிரகம்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், ஒன்பது கிரகங்களில் செவ்வாய் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. மேலும், செவ்வாய் சிவப்பு கிரகம் மற்றும் போரின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கும் ஒருவரை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாய், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தனது ராசியை மாற்றினார். டிசம்பர் 7 ஆம் தேதி இரவு 8:27 மணி வரை விருச்சிக ராசியில் பயணிப்பார். அதன் பிறகு, செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைவார். விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியான செவ்வாயால் எட்டு ராசிக்காரர்கள் நிதி ரீதியாக மற்றும் இந்த வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கடகம்
செவ்வாய் கிரகம் காதல், கல்வி மற்றும் குழந்தைகளுடன் தொடர்புடைய ஐந்தாவது வீடான கடக ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்தப் பெயர்ச்சி காதல் உறவுகளை வலுப்படுத்தும். உணர்ச்சி ரீதியாக ஏற்ற தாழ்வுகளும் இருக்கும். வாழ்க்கையில் ஏற்றம் காண்பதோடு, பொருளாதார நிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் காண்பீர்கள். உங்கள் அறிவுசார் திறன்கள் அதிகரிக்கும், மேலும் குருவின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஆனால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிம்மம்
செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சி சிம்ம ராசியின் நான்காவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. குடும்பம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்கவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் தொழில் லாபங்களை அனுபவிப்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். முறையாக முதலீடு செய்து எதிர்பார்ப்புக்கு அதிகமான வருமானத்தையும் உண்டாக்குவீர்கள்.
கன்னி
செவ்வாய் கன்னி ராசியின் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சி அடைந்துள்ளதால் தைரியம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எல்லாவித மகிழ்ச்சியையும் தரும். கடன் கொடுத்த இடத்தில் இருந்து கேட்காமலேயே பணம் திரும்ப கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் உறவுகள் நன்றாக இருக்கும். எழுத்து, ஊடக துறையில் ஈடுபடுபவர்கள் பயனடைவார்கள். சிறிய முயற்சிகள் பெரிய பலன்களைத் தரும். இக்காலத்தில் உங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிலுவையில் காணப்பட்ட பணிகளை முடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
துலாம்
செவ்வாய் துலாம் ராசியின் இரண்டாம் வீட்டிற்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்தப் பெயர்ச்சி உங்கள் பேச்சை மேம்படுத்தும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். மண வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் வாழ்க்கையில் ஒரு உத்வேகத்தையும், செயலில் இறங்கும் தீவிரத்தையும் ஏற்படுத்தும். கையில் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை குவிப்பீர்கள். உங்கள் லட்சியங்கள் நிறைவேற இது ஒரு சிறப்பான நேரம். நிதி ஆதாயங்கள் சாத்தியமாகும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது உறவுகளை வலுப்படுத்தும்.
விருச்சிகம்
செவ்வாய் உங்கள் ராசியான விருச்சிக ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். உங்கள் சொந்த ராசியில் ஏற்பட்டுள்ள இந்தப் பெயர்ச்சி உங்கள் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் பலப்படுத்தும். செயல்களைத் தள்ளிப்போடாமல், துடிப்புடன் முடிப்பீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவு அளிப்பார்கள். புதிய தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுப்படுத்தவும் வாய்ப்புகள் பல கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் பதினொன்றாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடைந்துள்ளதால் நண்பர்களிடமிருந்து நன்மைகளும் நல்ல செய்திகளும் கிடைக்கும். புதிய தொடர்புகள் மற்றும் நெட்வொர்க்கிங் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் செழித்தோங்கும். நிர்வாக சேவைகளில் பணிபுரிபவர்களுக்கு புதிய பதவி கிடைக்கக்கூடும். அனுபவம் வாய்ந்தவர்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புண்டு.
கும்பம்
செவ்வாய் கும்ப ராசியின் பத்தாவது வீட்டிற்குள் பெயர்ச்சி அடைவது, தொழில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. உயர் பதவிகள் மற்றும் கௌரவம் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உங்கள் மூத்த சகோதரரின் ஆதரவு உங்கள் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்கும். உங்களின் கவலைகள் நீங்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய நட்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செய்லபடுவீர்கள். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
செவ்வாய் மீன ராசியின் ஒன்பதாவது வீட்டிற்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்தப் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தையும் மதத்தையும் பாதிக்கும். நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உயர்கல்வி மற்றும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் மற்றும் விவசாயத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதி ஆதாயங்களை அனுபவிப்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நிதி ஆதாயத்தையும் காண்பார்கள். உங்கள் விருப்பம் போல் ஆடம்பர பொருட்கள் வாங்கும் நிலை வரும்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!