சுக்கிரனின் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அசுரர்களின் குருவான சுக்கிரன் மற்றும் கிரங்களின் தளபதியான செவ்வாய் ஆகியோரின் பெயர்ச்சி ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. செவ்வாய் கிரகங்களின
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அசுரர்களின் குருவான சுக்கிரன் மற்றும் கிரங்களின் தளபதியான செவ்வாய் ஆகியோரின் பெயர்ச்சி ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. மேலும், செவ்வாய் சிவப்பு கிரகம் மற்றும் போரின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கும் ஒருவரை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. நவகிரகங்களில் காதல், அன்பு, அழகு, ஆடம்பரத்தை குறிக்கும் கிரகமாக சுக்கிரன் பார்க்கப்படுகிறார். வேத ஜோதிடத்தில் ஆற்றல் மிக்க கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரனின் ஒவ்வொரு அசைவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணையும் போது அவற்றின் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தெரியும். சமீபத்தில், துலாம் ராசியில் சுக்கிரன் நுழைந்தது “மாளவ்ய ராஜ யோகத்தை” உருவாக்கியது. நவம்பர் 10 ஆம் தேதி காலை 9:46 மணிக்கு, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைத் தரும் சுக்கிரனும், ஆற்றலின் அடையாளமான செவ்வாயும் 30 டிகிரி இடைவெளியில் நகர்ந்து, “த்வித்வாதஷ் யோகத்தை” உருவாக்கும். இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கலாம். யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்கு ஆற்றலையும் உற்சாகத்தையும் தரும். செல்வ வீட்டில் செவ்வாய் கிரகத்தின் பார்வை எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் தரக்கூடும். உங்கள் வார்த்தைகளால் லாபமடைவீர்கள், காரியங்களைச் சாதிப்பீர்கள். உங்கள் பணி வேலையில் பாராட்டப்படும். பல காலமாகக் குழப்பத்தில் இருந்த விஷயங்களுக்குத் தெளிவான தீர்வு கிடைக்கும். தந்தையின் உறவினர்களால் இணக்கம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கவும் ஏற்ற தருணம். தந்தையின் உடல்நிலை மேம்படும். அரசு தொடர்பான வேலைகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
விருச்சிகம்
இந்த பெயர்ச்சி உங்கள் தைரியம், வீரம் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் துணைவருடனான உங்கள் உறவு இனிமையாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அன்பும் நல்லிணக்கமும் செழிக்கும். பணியிடத்தில் அதிகமான அதிகாரத்தையும், பொறுப்புகளையும் பெறுவீர்கள். இளைய சகோதரருடன் இணக்கம் ஏற்படும். உங்கள் பேச்சினால் சில காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை புகழ் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆளுமை மிகவும் அற்புதமானதாகவும், நேர்த்தியாகவும் மாறும். உங்கள் வேலையிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள். ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடலாம். நீங்கள் கவலைப்படும் பழைய கடன்கள் தீரும். மாணவர்கள் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் புதிய வேலைக்கான வாய்ப்புகள் தானாக வந்து சேரும். இளைய சகோதரர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்தி, வரன் தேடி வரும்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!