திருவோண நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் சூரியன் இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்!!
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற்றும் தந்தையர் பதவியின் காரணியாகக் கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசிக்கிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியன், திருவோண நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார், அதன் சுப செல்வாக்கு சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். ஜனவரி மாதத்தில் சூரியனின் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை அளித்திடும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சி அடைவது உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தரும். இந்தப் பெயர்ச்சி உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும், மேலும் வேலையில் உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல நேரமாகும். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான காலம் நெருங்கியுள்ளது. தொழிலில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இந்த நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். தலைமைத்துவ பண்பு வெளிப்படும். இந்த நேரத்தில் மத நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும், மேலும் வெளிநாட்டுப் பயணம் சாத்தியமாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் கைகூடும். அதிகாரம் மிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றியைப் பெற்று அரசு பணிகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் காணப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசியை சூரியன் ஆட்சி செய்வதால், திருவோணம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவது உங்கள் ஆளுமையை மேம்படுத்தும். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஏற்படும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் காலம் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். அவற்றை அடையாளம் கண்டு பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. சமூகத்தில் உங்களுக்கென ஒரு புதிய அடையாளம் கிடைக்கும். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் பக்கம் முடிவாகும் வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனத்தால் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தச் சூரியப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும். நீங்கள் எந்த ஒரு செயலிலும் முழு மனதுடன் ஈடுபட்டால், அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். கடன் சுமைகள் குறைந்து, மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் தகராறுகள் தீர்க்கப்பட்டு, நல்லிணக்கம் நிலவும். அரசுப் பணிகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் தொடங்கும் எந்த செயலும் வெற்றியில் முடியும். புதிய உயரங்களை தொடுவீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : 2026ல் பண மழையில் நனையும் ராசி