கேட்டை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான் இனி‌ இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் ஜோதிடத்தின் படி, சுக்கிரன் வரும் டிசம்பர் 9, 2025 அன்று கேட்டை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார். இவர் செல்வம், அன்பு, செழிப்பு, கலை, ஆ

By ·

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் ஜோதிடத்தின் படி, சுக்கிரன் வரும் டிசம்பர் 9, 2025 அன்று கேட்டை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார். இவர் செல்வம், அன்பு, செழிப்பு, கலை, ஆடம்பரம் மற்றும் திருமண பேரின்பத்திற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். கேட்டை நட்சத்திரம் சக்தி, வீரம் மற்றும் சாதனை ஆகியவற்றின் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த சிறப்பு நட்சதிரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சியாவது  பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். அந்த வகையில் யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.‌

ரிஷபம் 

ரிஷப ராசிக்கு சுக்கிரன் ஆட்சி செய்வதால், இந்த மாற்றம் இந்த ராசிக்கு மிகவும் நல்லதாக இருக்கும். வருமானத்தை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடும். இந்த நேரத்தில் முதலீடுகள் லாபத்தைத் தரும். திருமண வாழ்க்கை மிகவும் இணக்கமாக மாறும். நினைத்து வைத்திருந்த காரியங்கள் அனைத்து கைக்கூடும். வேலையில் பணி முன்னேற்றம் கிடைக்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் குடும்பத்திற்கான மரியாதை அதிகரிக்கும். 

சிம்மம் 

சுக்கிரன் கேட்டை நட்சதிரத்தில் நுழைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய திசையை அளிக்கும். உங்களுக்கு அறிவாற்றல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நிறைய பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு சாத்தியமாகும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் சரி வரும். புதிய ஆதாயங்கள் மற்றும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

கன்னி 

கன்னி ராசிக்கு, இந்த நேரம் உறவுகள் வலுவடைவதையும் நிதி வளர்ச்சியையும் குறிக்கிறது. சுக்கிரனின் செல்வாக்கின் கீழ், திருமண வாழ்க்கை மேம்படும். காதல் உறவுகள் வலுவடையும். நிதி நிலைமைகள் மேம்படும். மனக்கஷ்டங்கள் இருந்தால் இந்த காலப்பகுதியில் சரியாகி விடும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக மாற்றம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். பயணம் வெற்றியைத் தரும். மகிழ்ச்சியுடன் காத்திருப்பவர்களுக்கு இந்த காலப்பகுதியில் வெற்றி கிடைக்கும். படிப்பு, போட்டிகள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகலாம். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணைவியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். 

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி மிகவும் நன்மை தரும். இந்த காலகட்டத்தில், நிதி ஆதாயங்களும் வருமானமும் அதிகரிக்கும். குடும்ப மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவும். வணிகம் விரிவடையும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் வளர்ச்சி, பணக்கஷ்டங்கள், மனக்கசப்புகள் ஆகிய அனைத்தும் இந்த காலப்பகுதியில் சரியாகிவிடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலைக்காக கடன் வாங்கி இருந்தால் அது உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்!!

Recipes AMP · Quick view
View full