ஒரே வாரத்தில் மூன்று முறை பெயர்ச்சியாகும் புதன் பகவான் இனி இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கப் போகிறது!!

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் 21 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் அவ்வப்போது நட்

By ·

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் 21 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் வியாபாரம் மற்றும் தகவல் தொடர்புக்கு காரகனான புதன் கிரகம், ஒரே வாரத்தில் மூன்று முறை தனது நிலையை மாற்றிக் கொள்வது ஒரு மிக முக்கியமான மற்றும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த புதன் சஞ்சாரத்தால் பலனைடையப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

ரிஷபம் 

இந்த புதன் சஞ்சாரத்தால் ரிஷப ராசிக்காரர்கள் பெரிய பலன்களை அடைவார்கள். அவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். புதிய திட்டங்களைத் தீட்டவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இது பொன்னான காலம். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். உங்கள் புதிய யோசனைகள் வேலையில் அங்கீகாரம் பெறும். கலை மற்றும் கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாக அமையும்.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும்; மேலும் வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்க பெறுவார்கள். சமுதாயத்தில் மதிப்பு கூடும், எதிர்பார்த்த இடங்களிலிருந்து வருமானம் வரும். புதிய நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சவால்களைச் சமாளிக்கும் திறன் கூடும். எதிரிகளை எளிதில் முறியடிப்பீர்கள். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன வாகன யோகம் இப்போது கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சொகுசு வசதிகளும் கூடும்.

கன்னி 

புதன் கிரகமே அதிபதியாக உள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிக சிறப்பான பலன்களை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றியும், குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியும் கிடைக்கும். உங்கள் அனுபவத்தை வைத்துப் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். ஆன்மீகப் பயணங்கள் மற்றும் அறிவு சார்ந்த தேடல்கள் வெற்றியைத் தரும். திடீரெனப் பணம் வரலாம், அதே சமயம் எதிர்பாராத செலவுகளும் இருக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.

இதனையும் படியுங்கள் : கேந்திர யோகம் 2026

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை