மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- சனியால் இந்த ராசிக்காரர்கள் நன்மைகளை பெற போகிறார்கள்!!

ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவிற்கு சில கிரகங்களின் சேர்க்கையும் நல்ல அல்லது கெடு பலனைத் தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. அந்த வகையில் சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மார்ச் 15ஆம் தேதி பெயர்ச்சியாக

By Prem Kumar · 4/3/2025

ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவிற்கு சில கிரகங்களின் சேர்க்கையும் நல்ல அல்லது கெடு பலனைத் தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. அந்த வகையில் சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மார்ச் 15ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ளார். தொடர்ந்து சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்திலிருந்து மீன ராசிக்கு மார்ச் 29ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ளார். மீன ராசியில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை காரணமாக சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை பலவிதத்தில் நன்மை தரக்கூடியதாக அமையும். உங்களின் நிதி நிலையம் மேம்படும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தின் மூலம் லாபத்தைப் பெறலாம். இந்தக் காலகட்டத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகுந்த நன்மையைக் கொடுக்கும். வியாபாரம் சிறக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும். வண்டி வாகனம் வாங்குவது வீடு வாங்குவது விற்பது ஆகிய முயற்சிகள் நற்பலன்கள் தரும்.

மிதுனம்

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்குச் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை கர்ம ஸ்தானத்தில் நடப்பதால், நீங்கள் செய்யக்கூடிய வேலையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி வெற்றியடைய முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஊக்கம் கிடைக்கும். இந்தக் காலத்தில் வண்டி வாகனம் வாங்கலாம். தாயார் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வேலை மாற்றம், தொழில் மாற்றம் வெற்றியடையும். வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும். புதிய பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்படுவீர்கள். வழக்கு விசாரணைகள் சாதகமாக அமையும்.

துலாம்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு சனி மற்றும் சூரியன் சேர்க்கை அற்புத பலனை தரக்கூடியதாக அமையும். உங்களின் ஆரோக்கியம் முன்பே விட தற்போது மேம்படும். பணியிடத்தில் சாதகமான மாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலையை முன்னேற்றத்தை தரக்கூடிய வாய்ப்புகளும், மாற்றங்களும் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நன்றாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அலை வீசும். குடும்ப கவலைகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை நடக்கிறது. இதன் காரணமாக விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். உங்கள் செயல்களில் திட்டமிடல், கவனம் இருந்தால், எதிர்பார்த்ததை விட சிறப்பான வெற்றியைப் பெற்றிடலாம். புதிய வேலை மாற்றம், புதிய வாய்ப்புகள் தேடிக்கொண்டிருப்பவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினால் பலன் உண்டு. காதல், திருமணம் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி சேர்ந்து அவர்களுக்கு தன ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை பலன் உங்களின் நிதிநிலை முன்னேறுவதற்கான பல வாய்ப்புகள் அமையும். நீண்ட காலம் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த முடியும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். வேலை தொடர்பான பிரச்னைகள் தீரும். வெளிநாடு செல்ல அனுமதி பெறுவது வேலை கிடைப்பது ஆகியன நல்ல முறையில் நடைபெறும்.

இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full