அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து நிகழவிருக்கும் கிரக பெயர்ச்சிகள் இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அந
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடைய இருக்கிறார். அக்டோபர் 3 ஆம் தேதி புதன் துலாம் ராசியிலும், 24 ஆம் தேதி விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்கிறார். அக்டோபர் 9 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசியில் பிரவேசித்து அக்டோபர் 27 வரை துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் சூரியன் மற்றும் சனிபகவான் இருவரும் இணைந்து சமசப்தக ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். அக்டோபர் மாதத்தில் நிகழும் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். எனினும் இந்த மாற்றத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிக அளவில் நன்மை பெற போகிறார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கும்பம்
அக்டோபர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சனி மீன ராசியில் வக்ரமாக இருப்பார். இதன் விளைவாக கும்ப ராசிக்காரர்கள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெற உள்ளனர். பண வரவு அதிகரிக்கும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூடுதல் வருமானம் உங்களின் நிதிச் சுமையை குறைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்குத் தகுதிக்கேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். சிலர் விரும்பிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் முன்னேற்றமும், லாபமும் இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு அக்டோபர் மாதம் நல்ல மாதமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து காதல் கைகூடும். குடும்பத்தினருடன் நீண்ட தூரம் பயணம் செய்வீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். உடல்நலத்திலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை கொண்டு வரும். நிறைவடையாமல் இழுத்தடித்து வந்த வேலைகள், ஒவ்வொன்றாக நிறைவடையும். தொழிலதிபர்கள் குறிப்பிடத் தகுந்த லாபத்தை ஈட்டுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் அதிகரிக்கும். குடும்ப உறவு வலுபடும். உங்கள் வாழ்க்கையில் இருந்த மன அழுத்தமான சூழல் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். காதலில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வேலை செய்யும் இடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஐந்து கிரகங்களின் மாற்றமானது பல வழிகளில் நன்மைகளை வழங்க உள்ளது. அனைத்து கிரகங்களின் ஆசிகளும் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். பல்வேறு வழிகளில் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளும் முடிவுக்கு வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை சிறப்பாக வழி நடத்துவீர்கள். தம்பதியிடையே இருந்த மனக்கசப்பு தீரும். திருமண வாழ்க்கையில் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
தனுசு
அக்டோபர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் மன நிறைவை கொண்டு வரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் பணி பாராட்டப்படும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் சுப செய்திகள் வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சில சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.
இதனையும் படியுங்கள் : குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!