சனி பெயர்ச்சியால் அடுத்த சில ஆண்டுகளுக்கு ராஜயோகத்தை பெற விருக்கும் சில ராசிக்காரர்கள்!!
ஒன்பது கிரகங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தை சனி கிரகம் பிடித்துள்ளது. அதாவது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களை சனி பகவான் கொடுப்பார். சனி திசை மற்றும் ஏழரை சனி வாழ்க்கையில் மகிழ்ச்சி, துன்பம் இவற்றினை கொண்டுவரும் நிலையில், சனி மகிழ்ச்சியடையும் போது ஆசீர்வாதங்கள் அதி
ஒன்பது கிரகங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தை சனி கிரகம் பிடித்துள்ளது. அதாவது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களை சனி பகவான் கொடுப்பார். சனி திசை மற்றும் ஏழரை சனி வாழ்க்கையில் மகிழ்ச்சி, துன்பம் இவற்றினை கொண்டுவரும் நிலையில், சனி மகிழ்ச்சியடையும் போது ஆசீர்வாதங்கள் அதிகமாக கிடைக்குமாம். மெதுவாக நகரும் சனி கிரகமானது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது. அந்த வகையில் வரும் 2027 ஆம் ஆண்டில், சனி கிரகம் பெயர்ச்சி அடைவார். ஜூன் 3, 2027 அன்று சனி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவார். சனியின் பெயர்ச்சியால், பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சனியின் பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் மூன்று ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி ஒரு பொன்னான நேரமாக இருக்கும். அந்த வகையில் சனிபகவானால் பொன்னான நேரத்தை பெற விருக்கும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவேறும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். செல்வச் செழிப்பு உண்டாகும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். எதிர்பாராத நல்ல செய்திகளைக் கேட்பார்கள். வியாபாரம் செய்யும் சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடன் பிரச்சனையிலிருந்தும் விடுபடுவீர்கள். செல்வம் வெற்றி அடுத்தடுத்து வரக்கூடும். அசையா சொத்துக்களின் சேர்க்கை நடைபெறும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலனளிக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய வாய்ப்புகள் எழக்கூடும். மன அழுத்தம் மற்றும் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து திடீர் லாபம் கிடைக்கும். நின்று போன தொழில் மீண்டும் தொடங்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். மன அழுத்தம், தடைகள் மற்றும் சண்டைகளில் இருந்து விடுபட அதிக வாய்ப்புள்ளது. கடன் சுமை நீங்கி நிதி நிலைமை வலுவடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். சனி மேஷ ராசிக்கு நகரும்போது, கும்ப ராசி ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுப்படுவார். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் தொடர்பான தடைகள் நீங்கும். வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சனி பகவானின் அருளால் வருமானம் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகளுக்கு இது சரியான நேரமாகும்.
இதனையும் படியுங்கள் : 2026 கவனமாக இருக்க வேண்டிய ராசி