இந்த மாதம் உருவாகும் 3 ராஜ யோகங்கள் இனி இந்த ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான்!!

ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை, இடமாற்றம் ஆகியன ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. சில சமயத்தில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதால் சில யோகங்களைப் பெறுவார்கள

By ·

ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை, இடமாற்றம் ஆகியன ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. சில சமயத்தில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதால் சில யோகங்களைப் பெறுவார்கள். அந்த வகையில் வைகாசி மாதம் பிறக்கக்கூடிய சூரிய பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய மே 15ஆம் தேதி ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மேஷ ராசியில் ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ருச்ச யோகமும், ரிஷப ராசியில் சூரியன் புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகம், யோகமும், புதன் மற்றும் சுக்கிரன் அமைப்பு பரிவர்த்தனை யோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் பெற போகிறார்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

மேஷம் 

மேஷ ராசிக்கு மே 15ஆம் தேதி உருவாகக்கூடிய அதிர்ஷ்ட யோகங்கள் உங்களுடைய முடங்கி கிடக்கக்கூடிய வேலையை முடிக்கவும், வர வேண்டிய பணம் கைக்கு வர வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் உங்களுடைய கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பூர்வீக சொத்து கிடைப்பது அல்லது குடும்பத்தில் ஆதரவு பெருகுவது என நன்மைகள் நடக்கும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நிதி ஆதாயம் காண்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த காலகட்டம் தங்கள் தொழில் மற்றும் வேலை தொடர்பான துறையில் துரிதமாக செயல்படுவீர்கள். எதிர்காலத்தில் பதவி உயர்வு மற்றும் நன்மதிப்பை பெறுவதற்கான வழிவகுக்கக்கூடும். அரசு வேலைக்காக தயாராகிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு சாதகமான சூழல் அமையலாம். வியாபாரம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்களில் அல்லது பெரிய திட்டங்களில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரும். திருமண வாழ்க்கை மகிழச்சி நிறைந்ததாக இருக்கும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு புதிய தொடக்கத்தையும், நல்ல வாய்ப்புகளையும் அமையப் பெறுவீர்கள். மேலும் உங்களுடைய செயல்பாடுகள் வெற்றியை பெற்றுத் தரும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். இழுபறியாக இருந்து வந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். இது எதிர்காலத்திலும் உங்களுக்கு சிறப்பான லாபத்தை ஈட்டி தரும்.

தனுசு 

தனுசு ராசி மே 15ம் தேதி ஏற்படக்கூடிய யோகங்களால், அதற்கு பிந்திய காலகட்டங்கள் உங்களுக்கு லாபகரமாகவும், சுபத்துவம் தரக்கூடியதாக அமையும். நிதி சார்ந்த விஷயங்களில் நீங்கள் இருக்கும் முடிவுகள் லாபகரமானதாக அமையும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். நிதி சார்ந்த விஷயங்களில் நீங்கள் இருக்கும் முடிவுகள் லாபகரமானதாக அமையும். அரசு வேலைக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த அனைத்துப் பிரச்சனைகளையும் கடந்து வருவீர்கள்.

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி ராஜயோகம் 2026

Recipes AMP · Quick view
View full