2026ல் தன் பாதையை மாற்றும் ராகு, கேது இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை தான்!!
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்களை அனைவருக்கும் வழங்குகிறது. ஒருவருக்கு பிறக்கும் வருடம் எப்படியிருக்கும் என்பதை அவர்களின் பிறந்த ராசி மற்றும் கிரகங்களின் மாற்றம் தான் நிர்ணயிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்களை அனைவருக்கும் வழங்குகிறது. ஒருவருக்கு பிறக்கும் வருடம் எப்படியிருக்கும் என்பதை அவர்களின் பிறந்த ராசி மற்றும் கிரகங்களின் மாற்றம் தான் நிர்ணயிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் பாவ கிரகங்களாக அறியப்படுகின்றன. இவை நிழல் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ராகு கேது தங்களின் ராசிகளை மாற்றும்பொழுது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் பெயர்ச்சி அடைவார்கள். ராகு மற்றும் கேதுவின் இந்த பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்த கிரக மாற்றங்கள் 2026 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு பல்வேறு பலன்களை அளிக்கப்போகிறது. ராகு, கேது பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு, கேது அருளால் 2026 அனுகூலமான பலன்களை அள்ளித்தரும். நீண்டகால ஆசைகள் நிறைவேறும். உறவுகளில் பாசமும், புரிதலும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். உடல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணத்தை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கையில் நிம்மதி நிறைந்திருக்கும். ஆரோக்கியம் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். புதிய வாகனம், வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடும். வேலையில்லாமல் தவித்து வருபவர்கள் புதிய வேலைகளைப் பெறுவார்கள்.
மிதுனம்
ராகு பெயர்ச்சி மற்றும் கேது பெயர்ச்சியின் தாக்கத்தால், திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு திருமணம் நிச்சயம் ஆகும். காதல் திருமணம் செய்வதாக இருந்தால் உங்களின் கனவுகள் நிறைவேும். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வணிக முயற்சிகளில் அற்புதமான வளர்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்க முடியும். சகோதர உறவுகள் பலப்படும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, ராகு கேது பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையில் தெளிவையும் சமநிலையையும் கொண்டு வரும். சிக்கல்கள் தீரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வணிக முயற்சிகளைத் தொடங்குவதற்கும், புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதற்கும் இந்த நேரம் சரியானது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களுக்கான புதிய வேலையைக் கண்டுபிடிக்க முடியும். திருமணமாகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் கைகூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, 2026 அவர்களின் காதல் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அளிக்கும். பழைய மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் தீர்க்கப்படும். வாழ்க்கைத் துணையுடனான புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் 2026 அவர்களின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். வேலை செய்யுமிடத்தில் அதிகாரிகளின் உதவியையும், ஆதரவையும் பெறலாம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.
தனுசு
ராகு மற்றும் கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீண்டகால காதல் திருமணமாக மலரக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். வாழ்க்கைத் துணைவர்களிடையே புரிதலும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் காண்பீர்கள். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு, இந்த வருடம் மிகவும் சாதகமான வருடமாக இருக்கும். திடீர் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!