அடுத்த சில நாட்களுக்கு அதிசார பெயர்ச்சியாகும் குரு பகவான் இனி இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி தான்!!

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரங்களின்படி குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, ஞானம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாக அறியப்

By ·

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரங்களின்படி குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, ஞானம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாக அறியப்படுகிறார். தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, அக்டோபர் 19 ஆம் தேதி இரவு, குரு அதிசார நிலையில் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தது. இதனிடையே குரு நவம்பர் 11 ஆம் தேதி வரை இந்த ராசியில் வக்ர நிலையில் இருந்து பின்னர் டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு, அதன் உச்ச ராசியான கடக ராசியில் நுழைவது பல ராசிகளுக்கு நன்மைகளை உருவாக்கும். இருப்பினும் நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் நன்மைகளை வழங்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் 

வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு அற்புதமான நேரம் தொடங்குகிறது. வேலையில் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெறுவீர்கள், மேலும் உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து மரியாதை பெறுவீர்கள். நீங்கள் காத்திருந்த நல்ல தருணம் விரைவில் வர உள்ளது. புதிய வணிகம் அல்லது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை வலுப்படும். பல வழிகளில் சிக்கி இருந்த பணத்தை மீட்டெடுப்பீர்கள். பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த கடன் உதவி அல்லது பணம் கைக்கு வந்து சேரலாம். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். 

கடகம் 

புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்ல வாய்ப்புகளைத் தரக்கூடும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் குறைவது நிம்மதியைத் தரும். செலவுகளைக் குறைத்து பணத்தைச் சேமிக்க முடியும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக உணருவீர்கள். சிலர் பழைய கால கசப்புகளை மறந்து புதிய பயணத்தை தொடங்குவீர்கள். அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும். வீடு கார் வாங்குவதற்கான வாய்ப்புகளும், தொழில் முன்னேற்றம் அடையும். தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். தேர்வுகள் அல்லது நேர்காணல்களில் வெற்றி பெறும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். 

தனுசு 

வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலம் நன்மை பயக்கும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் செய்யப்படும் கொள்முதல்கள் எதிர்காலத்தில் லாபகரமாக இருக்கும். இந்த மாற்றம் உங்கள் சிந்தனையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் உங்களுடைய பயணத்தை தொடங்குவீர்கள். வேலை மற்றும் வணிகம் செய்து வருபவர்கள் புதிய வழிகளை காண்பீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான காலத்தை அனுபவிப்பீர்கள்.

மீனம் 

புதிய முயற்சிகளைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம். லட்சுமி மற்றும் குபேரனின் ஆசிர்வாதத்தால், உங்கள் நிதி நிலைமை வலுவடையும். வருமானம் அதிகரிப்பதும் செலவுகள் குறைவதும் உங்கள் பட்ஜெட்டை சமப்படுத்தும். பணம் சேமிக்கப்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் செல்வம் அபரிமிதமாக அதிகரிக்கும். பல வழிகளில் சிக்கி இருந்த பணத்தை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.

இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசி

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை