2026ம் ஆண்டு பெயர்ச்சியாகும் சூரிய பகவானால் இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் தான்!!
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற்றும் தந்தையர் பதவியின் காரணியாகக் கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசிக்கிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் சுமார் ஒரு மாதம், அதாவது மே 15, 2026 வரை மேஷ ராசியில் இருப்பார். இந்த பயணம் பொதுவாக அனைவருக்கும் அதிக நன்மைகளை தரும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை அடைவர். அவற்றில் யார் அதிக நன்மைகளை பெற போகிறார்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதலாம் வீடு லக்ன ஸ்தானத்தில் சூரியன் சுற்றுவதால் மேஷ ராசிக்காரர்கள் அதிக நன்மைகள் பெறுவர். தன்னம்பிக்கை உயர்வதுடன் தலைமை பண்புகள் வெளிப்படும். சில நல்ல செய்திகள் உங்களை தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். பணியிலுள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள், சலுகைகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்யலாம். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் பல விஷயங்களை இப்போது சாதிக்க முடியும்.
மிதுனம்
சூரியன் மிதுன ராசியின் 11-வது வீடு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆகையால் மிதுன ராசிக்காரர்கள் திடீர் நிதி வருமானங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் கடின உழைப்பு அதிக லாபத்தை ஈட்டும், மற்றும் உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய வருவாய் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சமூக மரியாதை உயரும். நண்பர்கள், குடும்ப ஆதரவு கிடைக்கும். நிறைவேறாத கனவுகள் நிஜமாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு தொழில் வீடான பத்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கு சிறந்த காலமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல தனிப்பட்ட மாற்றங்கள் வரும். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். புதிய வருமானம் மற்றும் நேர்மறையான ஆற்றலால் அவர்களின் நிதி நெருக்கடிகள் குறையும். தொழில் விரிவடையும். லாபம் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்களிலிருந்து நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் துவங்க விரும்புவோரின் கனவு நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசியின் ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சுற்றுகிறார். சிம்ம ராசியின் தலைவரும் சூரியனாவதால், சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த பலன்களை அனுபவிப்பர். இந்த காலகட்டத்தில் நீங்கள் அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடித்து பொறுப்புடன் கையாள முடியும். சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் கனவுகள் நிறைவேறும். கடந்த கால பிரச்சினைகள் தீரும். திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற பல சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சுற்றுவது மிக சிறப்பு காலமாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறவுகள் சமன்பாடாக மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வரன் தேடும்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வணிகத்தில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை அடைவீர்கள். மூதாதையர் சொத்துக்களை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வீடு மற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : 2026ல் தன் பாதையை மாற்றும் ராகு, கேது இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை தான்!!