30 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் உதயமாகும் சனி பகவான் இனி இந்த மூன்று ராசிகளின் கஷ்டங்கள் அனைத்தும் தீர போகிறது!!

ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். இது ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் கடக்கும். 2027 ஆம் ஆண்டில், சனி பகவானின் பெரிய பெயர்ச்சி நிகழவிருக்கிறது. சனி பகவானின் இந்த பெரிய பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும்.

By ·

ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். இது ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் கடக்கும். 2027 ஆம் ஆண்டில், சனி பகவானின் பெரிய பெயர்ச்சி நிகழவிருக்கிறது. சனி பகவானின் இந்த பெரிய பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும். அதன்படி இந்த பெயர்ச்சி மேஷ ராசியில் நிகழும். இந்த பெரிய மாற்றம் தொழில், வணிகங்கள் மற்றும் வங்கி இருப்புகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு பொன்னான நாட்களையும், மற்றவற்றுக்கு புதிய சவால்களையும் கொண்டு வரும். இந்த 2027 பெயர்ச்சி மூன்று குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த ஏழரை சனி முடிவுக்கு வருகிறது. இப்போது மன அழுத்தம், அதிக செலவுகள் மற்றும் வேலையில் ஏற்படும் தாமதங்கள் போன்றவற்றிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிக்கு கூடுதல் பணம் செலவாகும். சிலருக்கு பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். இடம், பூமி, வாகனம் வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அரசு விவகாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும்.

சிம்மம் 

இந்த ராசியின் மீது சனியின் பாதிப்பு முடிவுக்கு வரும். சில காலமாக நீங்கள் அனுபவித்து வந்த குடும்ப மோதல்கள் மற்றும் வேலைத் தடைகள் இப்போது தீர்க்கப்படும். உறவில் பரஸ்பர புரிதல் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து ஆதரவைப் பெறலாம். வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு 

இந்த ராசியின் மீது சனியின் பாதிப்பு முடிவுக்கு வரும். வேலையில் புதிய வாய்ப்புகள் மற்றும் பெரிய பொறுப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. தடைபட்ட திட்டங்கள் இப்போது வேகம் பெறும். உங்கள் உடல்நலம் மற்றும் குடும்ப உறவுகள் கணிசமாக மேம்படும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை அமையும். பதவி உயர்வும் எதிர்பார்த்த இட மாற்றமும் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் உண்டாகும். எதிரிகளை அடக்கி வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

இதனையும் படியுங்கள் : 2026 கவனமாக இருக்க வேண்டிய ராசி

Recipes AMP · Quick view
View full