கேது பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த

By ·

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கென தனி சொந்த ராசிகள் கிடையாது. நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், கேது ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இது இன்னும் 8 மாதங்கள் வரை நீடிக்கும். இவரின் நட்சத்திர இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் என்ன பலன்களை பெற போகிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

கேது பகவான் ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு மாற்றமடைவதன் மூலம், மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் பணியிடத்தில் கடுமையான சிரமத்தை சந்திப்பார்கள். இது மன நிம்மதியை கெடுக்கலாம். வருமானத்தில் வளர்ச்சி உண்டாகும். நண்பர்கள், உறவுகள் வலுவாகும். உங்கள் வேலை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

கேது பகவானின் இந்த பெயர்ச்சியால் குழந்தை சார்ந்த பிரச்னைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீங்கும் எனலாம். இந்த நேரத்தில் உங்கள் புதிய இடத்தில் பணியும் கிடைக்கலாம், அங்கிருந்து நீங்கள் புதிது புதிதாக விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் சிறப்பான பலன்கள் பெறலாம். உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். ஆனால் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

கேது பகவானின் இந்த பெயர்ச்சி மூலம், நீங்கள் சொத்துகள், வாகனங்கள், நகைகள் ஆகியவற்றை வாங்குவீர்கள். வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் உங்கள் மன நிம்மதிக்காக ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் வேலைகள் சிறப்பான வெற்றியை பெறலாம்.

கடகம்

கேது பகவானின் இந்த பெயர்ச்சியால் உங்களின் ஈகோ அதிகரிக்கும். இதனால் உங்களின் பணியிடத்திலும், காதல் வாழ்க்கையிலும் பிரச்னை வரலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உடன்பிறப்புகளுடனும் நல்லுறவை பின்பற்றுங்கள். இலக்கை அடைய முடியும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். அரசியல் மற்றும் ஊடகத் துறைகளுடன் தொடர்புடையவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

சிம்மம்

கேது பகவானின் இந்த பெயர்ச்சி காலம்தான் உங்களுக்கு புது வீடு அல்லது சொத்துகளை வாங்க உகுந்த காலகட்டமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் தொழில் ரீதியாக முன்னேற்றத்தை அடைய முடியும். உத்தியோகத்திற்கு ஏற்ற சூழல், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூக கௌரவம் உயரும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

கன்னி

இந்த ராசிக்காரர்களின் இயல்பில் மாற்றம் ஏற்படலாம். திடீரென கோபம் உச்சிக்கு ஏறலாம். உடனே சாந்த அடைந்தும்விடுவீர்கள். இது ஒரு பழக்கமாக மாறலாம். அடிவயிறு சார்ந்த நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. இந்த காலத்தில் உங்களின் சம்பளம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். வழக்கு தொடர்பான விஷயத்தில் வெற்றியை பெறலாம். உறவு மேம்படும்.

துலாம்

இந்த ராசிக்காரர்களில் மார்க்கெட்டிங் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல பலன்கள் இருக்கின்றன. ஆன்மீகம் நோக்கிய ஆர்வம் உங்களிடம் அதிகரிக்கும். பயணம் செல்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். உங்கள் செயலில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் புதிய முயற்சிகளில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி இழப்புக்கான அறிகுறிகள் உள்ளன. உங்கள் மீது பொறுப்புகளின் சுமை அதிகரிக்கலாம்.

விருச்சிகம்

வருவாயில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த காலகட்டத்தில் நீங்கும். மூத்தவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும், ஆனால் நீங்களாக சென்று உதவிக்கேட்டால் மட்டுமே கிடைக்கும். கடின உழைப்பிற்கான பாராட்டும், பலனும் கிடைத்து மகிழ்வீர்கள். ஆனால் அதிகரிக்கும் செலவுகளை சமாளிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகப் நேரிடும். நீங்கள் கடன் வாங்கவும் நேரிடலாம்.

தனுசு

இந்த காலகட்டத்தில் உங்களின் வேலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உங்களுக்கு உதவி தேவைப்படும்பட்சத்தில் மூத்தவர்களிடம் கேளுங்கள், நன்மை கிடைக்கும். வேலையில் கவனமாக இருங்கள், வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள். நிதிநிலையில் நீங்கள் எதிர்பார்த்த வகையில் முன்னேற்றம் அடையும். நஷ்டங்கள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.

மகரம்

இந்த காலகட்டத்தில் வீட்டில் பல்வேறு பூஜைகளை மேற்கொள்வீர்கள் மற்றும் ஆன்மீக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சொத்து சார்ந்த பணபரிமாற்றத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். வீடு, மனை, சொத்து வாங்கும் விஷயத்தில் முன்னேற்றத்தை தரும். அதோடு மனக்குழப்பங்கள், பிரச்சனை குறையும். இந்த நேரத்தில் திடீர் நிதி ஆதாயங்கள் இருக்கும். பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்

இந்த காலகட்டத்தில் நீங்கள் ஈகோவை தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் பிரச்னையையும் தவிர்க்கலாம். உடல்நலனில் பிரச்னை வரலாம், மருத்துவரின் ஆலோசனையை முறையாக பின்பற்றவும். தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல செய்திகள், பெரிய வெற்றியை அடையலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள். உங்கள் திறமை மற்றும் நினைவாற்றல் சிறக்கும்.

மீனம்

இந்த ராசிக்காரர்களின் பணியிடத்தில் நிலைத்தன்மை இருக்காது. வணிகத்தில் நீங்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும். மூத்தவர்களின் அறிவுரைகளை பின்பற்றவும். மனைவியின் உடல்நலனையும் கவனியுங்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை மிதுன ராசியினருக்கு மேம்படும். உங்களின் தடைப்பட்ட காரியங்கள், நின்று போன வேலைகள் மீண்டும் சிறப்பாகத் தொடங்க வாய்ப்புள்ளது.

Recipes AMP · Quick view
View full