சூரியனும் ராகுவும் இணைவதால் உண்டாக்கும் கிரஹண யோகம் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!!
வேத ஜோதிடத்தில் இருவேறு கிரகங்களின் இணைவு, சுப யோகம் அல்லது அசுப யோகத்தின் பிறப்புக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் கிரகங்களின் அரசன் என அழைக்கப்படும் சூரியனுடன் - ராகு விரைவில் இணைந்து கிரஹண யோகம் எனும் யோகத்தை உண்டாக்குகிறது. வேத ஜோதிட கணிப்புகள் படி வரும் பிப்ரவரி 13-ஆம் நாள் ச
வேத ஜோதிடத்தில் இருவேறு கிரகங்களின் இணைவு, சுப யோகம் அல்லது அசுப யோகத்தின் பிறப்புக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் கிரகங்களின் அரசன் என அழைக்கப்படும் சூரியனுடன் – ராகு விரைவில் இணைந்து கிரஹண யோகம் எனும் யோகத்தை உண்டாக்குகிறது. வேத ஜோதிட கணிப்புகள் படி வரும் பிப்ரவரி 13-ஆம் நாள் சூரியன் கும்ப ராசியில் குடியேறுகிறார். அந்த வகையில் அங்கு ஏற்கனவே குடியிருக்கும் ராகுவுடன் இணைந்து கிரஹன யோகம் உண்டாவதற்கு காரணமாக அமைகிறார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது பிப்ரவரி மாதத்தில் ஒன்றிணையும் ராகு-சூரியனால் உருவாகும் கிரகண யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கடகம்
ராகு மற்றும் சூரியனின் சேர்க்கையால் உண்டாகும் இந்த கிரஹன யோகமானது, கடக ராசியினரின் ஜாதகத்தில் 8-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை கொண்டு வரும். உங்கள் வாழ்க்கை துணையுடன் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த குழப்பங்கள் அதிகரிக்கும். இக்காலத்தில் ஏதாவது ஒரு விஷயத்தால் மன அழுத்தமடையக்கூடும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 6-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த கிரஹன யோகம், அவர்களின் எதிரிகளை அதிகரிக்கிறது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும். அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட அனுமதி மறுக்கப்படும். காதல் உறவில் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கடன் அதிகரிக்கும் ஒரு காலமாக இது இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வராது. ரகசிய எதிரிகள் தொந்தரவு செய்யக்கூடும். வீண் பழியை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் ஜாதகத்தில் 12-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த சூரியன் – ராகு சேர்க்கையானது, மீன ராசியில் பிறந்தவர்களின் செலவுகளை அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு முழுவதையும் குறைக்கும். முடிந்தளவுக்கு பெரிய முதலீடுகளை தவிர்த்திடுங்கள். ஆரோக்கிய நிலையிலும் பின்னடைவை கொண்டு வரும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் காணப்படும். தொண்டை, மார்பு பகுதிகளில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வீடு, மனை என அனைத்திலும் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம்.
இதனையும் படியுங்கள் : 2026ல் சனியின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு யோகம் தான்!!