சூரியன் மற்றும் சனியால் கோடீஸ்வரராகும் யோகம் கிடைக்கப் போகும் ஆறு ராசிகள்
சூரியன் மற்றும் சனி கிரகங்கள் தந்தை மகனாக இருந்தாலும் அவர்கள் இருவரும் பரம எதிரிகளாக இருக்கிறார்கள். இந்த மாதம் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 2 பகை கிரகங்களும் பூர்விக இடத்தில் இருந்து பார்க்கின்றனர். சூரியன் அவருடைய சொந்த ஸ்தானமான சிம்ம ராசியில் இருப்பதாலும் சனி அவர
சூரியன் மற்றும் சனி கிரகங்கள் தந்தை மகனாக இருந்தாலும் அவர்கள் இருவரும் பரம எதிரிகளாக இருக்கிறார்கள். இந்த மாதம் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 2 பகை கிரகங்களும் பூர்விக இடத்தில் இருந்து பார்க்கின்றனர். சூரியன் அவருடைய சொந்த ஸ்தானமான சிம்ம ராசியில் இருப்பதாலும் சனி அவருடைய ஸ்தானமான கும்ப ராசியில் இருப்பதாலும் இந்த இரண்டு பரம எதிரிகளும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஒரு சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அடையப் போகிறார்கள். மேஷ ராசி மிதுன ராசி துலாம் ராசி, தனுசு ராசி, மகர ராசி மீன ராசி போன்ற ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகிறது. அதனைப் பற்றி முழுதாக இந்த பதிவில் பார்க்கலாம்
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அதிகாரிகளுடன் நல்ல ஒற்றுமை ஏற்பட்டு அதன் மூலம் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் எதிர்பாராத வழிகளில் இருந்து கிடைக்கும் நீண்ட நாட்களாக சிரமப்பட்டு கொண்டிருந்த நோய்களிலிருந்து விடுபட அதிகமான வாய்ப்புள்ளது. சொத்து தகராறு நீதிமன்ற வழக்குகள் போன்ற பிரச்சினைகள் தீர்ந்து வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். முன்பை விட இப்பொழுது தைரியம் தன்னம்பிக்கை அனைத்தும் உயரிய தாக இருக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து சொந்த வேளையில் கவனத்தை அதிகரிக்கும் நிலை ஏற்படும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் பதவி உயர்வு அனைத்தும் கிடைத்து வெளிநாட்டில் வேலை அயல் நாட்டுத் தொடர்பு போன்றவை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் அதே நேரத்தில் பெற்றோர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கலாம்
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த விருப்பமான வேலை கிடைத்து சொத்து பிரச்சனைகள் தீர்ந்து சொத்து மதிப்பு உயர்ந்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றியை மட்டுமே பெறுவீர்கள். வேலை திருமணம் அனைத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தால் அதில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு பண ஆதாயத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் இருந்து வந்த தடைகள் பிரச்சினைகள் நீங்கி வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் செல்வமும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் நினைத்த மாதிரி பெரிய சம்பளத்துடன் வேலை உறுதியாகும். மற்றவர்களை அதிகாரம் செய்யும் இடத்தில் அமர்வீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும் மேலும் நீங்கள் நினைத்த மாதிரியான இடத்திற்கு பணி மாற்றம் கிடைத்த அதிகமான வாய்ப்பு உள்ளது.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு பரம எதிரிகளாக இருக்கக்கூடிய கிரகங்களின் அம்சுத்தாள் வேலைகள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் அதிகாரிகள் உங்களை அதிகமாக நம்புவார்கள் சிறப்பான பொறுப்புகளும் உங்களுக்கு கிடைக்கும் அதன் மூலம் வேளையில் நல்ல மரியாதையான இடம் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் கைகூடி வர அதிகமான வாய்ப்புள்ளது திடீரென்று உங்களுக்கு பணவரவு ஏற்படும் அரசு வகையில் நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைத்து தொழில் மற்றும் வியாபாரத்திலும் பொருளாதார ரீதியான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்
மீன ராசி
மீன ராசிக்கு சனி கிரகத்தின் தாக்கத்தால் ஆரோக்கியமான வாழ்க்கையும் ராஜ யோகமும் கிடைக்கும் நீங்கள் மேற்கொள்ளும் சின்ன சின்ன முயற்சியால் அனைத்து காரியங்களும் நிறைவேறி வருமானமும் நன்றாக கிடைக்கும் உங்களுடைய உறவினர்களுடன் இருந்து வந்த பகை தீர்ந்து ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். சொத்து தகராறு தீர்ந்து உங்கள் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு உச்ச ஆட்டம், இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!