2025 குரு பெயர்ச்சியால் வெற்றியை தொடப்போகும் ராசிகள்!!
அக்டோபர் 9,2024 ஆம் தேதி அன்று குருபகவான் ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பிப்ரவரி 5 வரையில் வக்கிர நிலையில் தான் தொடர்வார். அடுத்த வருடம் மே மாதம் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சியாக போகிறார் இது மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக இருக்கப்போகிறது. 2025 ஆம் ஆண்டில்
அக்டோபர் 9,2024 ஆம் தேதி அன்று குருபகவான் ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பிப்ரவரி 5 வரையில் வக்கிர நிலையில் தான் தொடர்வார். அடுத்த வருடம் மே மாதம் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சியாக போகிறார் இது மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக இருக்கப்போகிறது. 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரு வக்ர நிவர்த்தி மற்றும் மே மாத குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் அந்த அதிர்ஷ்டமான ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியும் குரு வக்ர நிவர்த்தியும் பலவிதமான நல்ல செய்திகளை கொண்டுவரும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நன்றாகவே நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் அனைத்துமே வெற்றி அடையும்.
மிதுன ராசி
குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரனுடன் திருமணம் நிச்சயிக்கப்படும். வருமானத்திற்கான வழிகள் பல கிடைக்கும். எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள் வியாபாரிகளும் தொழிலில் லாபத்தை பார்ப்பார்கள்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி பல நல்ல வழிகளை காண்பிக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மரியாதை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகள் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் அனைத்து முதலீடுகளும் நன்மையை கொடுக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்து இருந்தால் லாபம் கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தியால் 2025 ஆம் ஆண்டு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேரும். பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல உறவு இருக்கும் தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் பல உயரங்களை அடைந்து வருமானத்தை பெறுவீர்கள்
துலாம் ராசி
துலாம் ராசி காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். வருமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நல்ல பல வழிகள் கிடைக்கும். எதிர்பார்க்கக் கூடிய இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சனி மற்றும் குரு பகவானின் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!!